பக்கம்:Sahadeva's Stratagem.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரீகி. பூlகி. சகதேவன் சூழ்ச்சி ]1۔ یمنٹ پی இது கான் செய்த தீவினையின் பயனுகும். உம்முடைய மனம் போனபடி யெல்லாம் சொல்லும், நாங்கள் என் னவோ உம்மைவிடப் போகிறதில்லை, பெருமாளில்லாமல் திருநாள் நடவாதென்பது போல் உம்மைவிட்டு ஒருகாரி யமும் நாங்கள் செய்யப் போகிறதில்லை. உங்களுக்கு இப்படிப் பட்ட மனஸ்தாபம் வந்ததற்குக் காரணத் தைக் கூறவேண்டுகிறேன். என்ன காங்கள் உள்ளுக் குள்ளே எங்கள் பகைவருடன் உறவாடுகிறது ? வாஸ்தவ மாய் நான் ஒன்றும் அறிகிலேன். அதை மாத்திாம் உடனே எங்களுக்கு அறிவிக்க வேண்டும். ஸ்வாமி தேவரீர் பாதமே எங்களுக்கு எச்சமயத்திலும் கதி யென்று பற்றினுேம் ! உமக்கு விருப்பமிருந்தால் எங்களை உதைத் துத் தள்ளி விட்டுப்போம்! (காலைப்பற்றப் பார்க்கிரு.ர்.) ஹா ஹ வேண்டாம் வேண்டாம் தருமாாஜனே தாம் எனக்கு மூத்தவர் இங்ங்ணம் செய்யலாகாது. எழுந்திரும், உட்காரும் (கைலாகு கொடுத்து எழுப்பி ஆசனத்தில் அமரச்செய்கிருர்) இது கியாயமல்ல. ஹே கிருஷ்ண மூர்த்தி தாம் செய்வது மாத்திரம் நியாய மாகுமா ? இழியோர்களாகிய நாங்கள் ஏதாவது தவறி ழைத்தால் அதைச் சீர்திருத்தி வைக்க வேண்டியகடமை உம்முடையதாயிருக்க, நடு ஆற்றில் விட்டது போல் எங்களை விட்டுப்பிரிவதாக இச்சமயம் தாங்கள் சொல் லலாமா ! இப்பொழுதாவது சமாசாாம் இன்னதென்று சொல்லும். நான் என்னென்று சொல்வது அம்மையார் மெழுகி மொக்கிட்ட இடத்தில் அறியாதவள் முன் தானேயால் அழித்தாள் என்பது போல, பெரியோர்கள் கஷ்டப் பட்டுச் செய்யும் பெருங்காரியங்களை யெல்லாம் சிறியவர் கள் சிதைத்து விடுகிருர்கள். அதையின்ன தென்று கூறுவேருகில் என் பேசில் குற்றம் தான் மிகுதியாகும் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/28&oldid=729816" இலிருந்து மீள்விக்கப்பட்டது