பக்கம்:Saiva Nanneri.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை, நண்ணி நின்றறுப்பது நமச்சிவாயவே...' இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே. தம்பிரான் தோழர் நாத்தழும்ப்ேறும் படியாக நமச் சிவாயத்தைத் தாம் பயின்ற சிறப்பைக் கூறியுள்ளார். ' கற்றவா உனைநான் மறக்கினும் சொல்லுங்ா 轟 நமச்சிவாயவே...' சேடனே உனை நான் மறக்கினும் சொல்லுநா நமச்சிவாயவே...' திருவைந்தெழுத்துக்களில் சி என்பது சிவபரம் பொருளேயும், வ என்பது அவனது அருளையும், ய என்பது உயிரையும், என்பது இறைவனுடைய மறைப்புச் சக்தி யையும், ம என்பது மலத்தையும் குறிக்கும். இவ்வைக் தெழுத்தினேயும் எண்ணுங்கால் சிவத்துக்கும் உயிர் களுக்குமுள்ள தொடர்பும், சிவத்துக்கும் உலகத்துக்கு முள்ள தொடர்பும், உயிர்கட்கும் உலகத்துக்குமுள்ள தொடர்பும், அத் தொடர்புண்டான காரணமும், அதனல் விளேயும் பயனும் எண்ணத்திற்கு வந்து இறைவன் திரு வருள்ழேலே விட்டு நீங்காது நிற்கும் கிலேமையைக் கைவரச் செய்யும். அடியார்கள் ஐந்தெழுத்தின் துணையை உறுதியா கப் பற்றியவர்களாக விளங்கினர்கள். அமர்திேயார் து?..) யில் ஏறியபொழுதும், ஆளுயர் குழலிசைத்த பொழுதும், திலகவதியார் அப்பரைச் சைவராக்க விபூதி தங் தபொழு ஆம். அப்பர் கல்மேல் மிதந்தபொழுதும், சம்பந்தர் முத்துச் சி.வி கையில் ஏறிய பொழுதும், அவர் பாண்டிய நாட்டிற்குப் புறப்பட்ட பொழுதும், தண்டியடிகள் சமணர் முன் சப தம் கூறிக் குளத்தில் மூழ்கியபொழுதும், புகழ்ச்சோழர் தீக்குளித்த பொழுதும், சேரமான் பெருமாள் கயிலாயத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/140&oldid=729888" இலிருந்து மீள்விக்கப்பட்டது