பக்கம்:Saiva Nanneri.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 தனர். , இரண்டாம் குலோத்துங்கன் போன்ற சோழ மன் னர்கள் தங்கள் பெரும் பொழுதைத் தில்லையில் கழித்த னர். தில்லைத் திருக்கோயிலிலும் ஆரூர்ப் பூங்கோயிலி லும் சோழர்கள் செய்த திருப்பணிகள் பல. சோழர்கள் பாடல் பெற்ற கோயில்களை எல்லாம் கற்றளிகளாக்க முற் பட்டனர். அவை பல்லவர் காலத்தில் அழியத் தக்க மண், செங்கல், சுண்ணும்பு, மரம், உலோகம் இவற்ருல் அமைக் கப்பட்டன. அழியாத கடவுளுக்கு அழியாத நிலையில் கோயில் அமைக்க வேண்டும் என்பது சோழர் விருப்பம். அதல்ை கற்களே கிடைக்காத சோழ நாட்டில் பல இடங் களிலிருந்தும் கற்களே அரும்பாடுபட்டுக் கொணர்ந்து,வியத் தகு முறையில் பழைய கோயில்களேக் கற்றளிகளாக மாற் றினர். அவர்கள் முதலில் கருவறையையே மாற்றி அமைத்த னர். பின்பு படிப்படியாகக் கோயிலின் பிறபகுதிகளைக் கல்லால் அமைத்தனர். இத்துறையில் வழிகோலியவன் சோழப் பேரரசுக்கு அடிகோலிய முதலாம் ஆதித்த சோழன். அவன் காவிரியின் தோற்றுவாயிலிலிருந்து அது கடலொடு கலக்கும் இடம் வரையில் ஆற்றின் இருகரை களிலுமிருந்த சிவன் கோயில்களைக் கற்றளிகளாக மாற்ற முயன்ருன். அவனைப் பின்பற்றிப் பின்வந்த சோழர்கள் தொடர்ந்து நானுாறு ஆண்டுகள் இத்திருப்பணியில் ஈடு பட்டனர். இவ்வாறு சோழர்கள் பாடல் பெற்ற கோயில் களைக் கற்றளிகளாக்கியதோடு அமையாது பெரிய புதிய கற்றளிகளே அமைக்கலாயினர். அவருள் தலே சிறந்தவன் முதலாம் இராசராசன் ஆவான். அவன் தஞ்சையில் கண் டார் வியக்கும் வண்ணம் மிகப்பெரிய சிவன் கோயிலேக் கட்டினன். அவ்வேலே பல ஆண்டுகள் நடைபெற்றது. கருவறைக்குமேல் ஏறத்தாழ இரு நூறடி உயரமுள்ள மிகப் பெரிய விமானத்தை அமைத்தான். அகன்ற பெரிய திருச் சுற்றும், உயர்ந்த மதிலும் அமைக்கப்பட்டன. மிக ண்ேட தாரம் சாரம் அமைத்து விமானத்தின்மேல் அமைக்க வேண்டிய சதுரக்கல் மேலே கொண்டு செல்லப்பட்டது. இ | ச ராசன் மிகப் பெரிய சிவலிங்கத்தைக் கருவறையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/157&oldid=729906" இலிருந்து மீள்விக்கப்பட்டது