பக்கம்:Saiva Nanneri.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 எழுந்தருளச் செய்தான். அப்பேரரசன் அத்திருக் கோயி இலத் தன் உயிர் போலக் கருதின்ை. அதன் பூசைக்குரிய பொருள்களில் சிலவற்றைத் தன்ட்ைசிக்குட்பட்ட இலங் கையிலிருந்து வருவித்தான். மிகப் பல வெள்ளிப் பாத்தி ரங்களும், பொன் நகைகளும், கல்லிழைத்த நகைகளும் செய்வித்தான். அவனுடைய மனேவியரும், மக்களும், உற வினரும், உயர் அலுவலரும் அக்கோயிற்குச் செய்த தானங் கள் பலவாகும். அவன் தமக்கையார் குந்தவைப் பிராட்டி யார் அறங்கள் பல செய்தார். இங்ஙனம் அரசனது குடும்பத்தார் அனைவரும் சிறப்பாக அறம் செய்யப் பெற்ற கோயில் வேறு ஒன்றும் தமிழகத்தில் இல்லை. . இராசராசன் அப்பெருங் கோயிலே ஒரு கலக்கூட மாக மாற்றினன். தமிழகத்துக் கோயில்களிலிருந்த சிறந்த ஆடல் பாடல் உடைய மகளிர் கானுாற்றுவரைத்தன்பெரிய கோயிலில் பணிசெய்ய அமர்த்தின்ை. ஒவ்வொருத்திக்கும் ஒரு வேலி நிலமும் இருக்க விடும் வழங்கினன். ஒவ்வொரு பூசை நேரத்திலும் வேத மந்திரங்களைச் சொல்ல "ஆரியம் பாடுவார்' என்பவரை அமர்த்தின்ை. திருமுறைகளே ஒத 48 பேரை அமர்த்தின்ை. கோயில் கருவறையின் வெளிப்புறச் சுவரில் சோழர்கால ஒவியங்கள் தீட்டப் பெற்றன. சுந்தரர் வரலாற்றைக் குறிக்கும் ஒவியங்கள் "உயிரோவியங்களாகக் காட்சி தருகின்றன. நடனமாதர் ஒவியங்களும் குறிப்பிடத் தகுந்தனவாகும். இராசராசன் கட்டிய இப்பெரிய கற்றளி அவன் பெயரால் இராசராச் சேசுரம் (இராசராச ஈசுவரம்) எனப்பட்டது. அங்குள்ள சிவலிங்கம் இராசராசேசுவரமுடையார் எனப்பெயர் பெற் றது. அக்காலத்தில் அம்மனுக்குத் தனிக்கோயில் கட் டும் வழக்கம் இல்லே. கருவறையிலேயே அம்மன் சிலே ஒன்று வைக்கப்பட்டுப் பூசிக்கப்பட்டு வந்தது. கி. பி. 1100 இன் பிற்பகுதியிலிருந்துதான் அம்மனுக்குத் தனிக் கோயில் கட்டும் முயற்சி தோன்றியது. தஞ்சைப் பெரிய கோயிலிலிருந்த அம்மனின் பெயர் உமாபரமேசுவரி என் பது. அப்பெரிய கோயிலில் சுந்தரர், பரவையார், சிறுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/158&oldid=729907" இலிருந்து மீள்விக்கப்பட்டது