பக்கம்:Saiva Nanneri.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.1 மெய்க்கீர்த்தி வரைந்தமை ஆகும். அவன் கி. பி. 993 ஆம் ஆண்டில்தான் முதன் முதலாக மெய்க்கீர்த்தி பொறிக்கும் வழக்கத்தைத் தொடங்கின்ை. வரலாற்றுக்குப் பேருதவி புரியவல்லது இம்மெய்க்கீர்த்தி ஆதலால் முதல் இராச ராசனது பேரறிவினை வரலாற்ருசிரியர்கள் வானளாவப் புகழ்கின்றனர். மெய்க்கீர்த்திகளின் நடையிலே தனி அழகு சுடர் விடுவதைக் காணலாம். துாய தமிழ்ச் சொற் களால் ஆகிய இம்மெய்க்கீர்த்திகள், மொழி நுட்பமும், சொல் திட்பமும், பொருள் நுட்பமும் உடைய சிறந்த இலக்கியச் செல்வங்களாகும். தமிழ் இலக்கியத்திலே சிறுகதை இலக்கியம், நெடுங்கதை இலக்கியம் முதலிய தனித்தனி இலக்கிய வகைகள் இருப்பது போலக் கல் விெட்டு இலக்கியமும் இருப்பது தமிழுக்குப் பெருமை அன்ருே ! பதினுன்கு சாத்திரங்கள் சித்தாந்த சாத்திரங்கள் தொடங்கப் பெற்ற கால மும் சோழர் காலமே. மெய்கண் டார், உமாபதி சிவம் போன்ருேர் வாழ்ந்து சித்தாந்த சாத்திரங்களே இக்காலத் தில்தான் செய்தருளினர். திருவுக்தியார், திருக்களிற் றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார் (பரபக்கமும் சுபக்கமும்), இருபாவிருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினவெண்பா, போற்றிப்பஃருெடை, கொடிக்கவி, நெஞ்சு விடு தாது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப கிராகரணம் ஆகிய பதின்ைகு நூல்களும் சித்தாந்த சாத்திரம் எனப்படும். மெய்கண்ட சாத்திரம் என்ற பெயரும் இவைகட்கு வழங் கப்படுகிறது. இவற்றுள் திருவுக்தியார், திருக்களிற்றுப் படியார் ஆகிய இரண்டும் மெய்கண்டார் காலத்துக்கு முக் தியன என்பது பல பேரறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சியில் கண்ட முடிபாகும். தமிழரின் தலைசிறந்த சித்தாந்த நாலா கிய சிவஞானபோதம் மெய்கண்டார் அருளிச் செய்தது. இச் சிவஞான போதத்துள் பன்னிரண்டு குத்திரங்களே சை-11 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/166&oldid=729916" இலிருந்து மீள்விக்கப்பட்டது