பக்கம்:Saiva Nanneri.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

". 2. சங்க காலத்தில் சைவம் சங்க இலக்கியங்களில் சிவன் உலகிலே பிற நாடுகட்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பு. தமிழ் காட்டுக்குண்டு. அச்சிறப்பு எது ? எகளுல் ஏற்பட்டது ? தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழர் சமயம் முதலியற்றுள் எதன் வரலாறும் வரலாற்ருசிரியனின் கைக்கு அகப்படுவதில்லே கண்ணுக்குப் புலவைதில் சில : கினேப்பிற்கு எட்டுவதில்லை. அந்த அளவுக்கு அவற்றின் வரலாறு காலங்கடந்து செல்லுகிறது ; கருத்துக்கெட்டாக வாறு விளங்குகிறது. அவ்வாறே தமிழர் தம் தொன்மைக் சமயமாம் சைவ சமயத்தின் வரலாறும் கினோப்பிற்கும் வரலாற்றுக்கும் எட்டாது சென்றுளது. அத்தகைய தொன்மைச் சிறப்புடைய சைவ சமயத்தினைப் பற்.பிக் கூறும் நூல்களுள் காலத்தினுல் முந்தியவை சங்க இலக் கியங்களாகும். சங்க இலக்கியங்களிலே சிவனேப் பற்றிய குறிப்புக்கள் பாராட்டத்தக்க அளவுக்குக் காணப்படு கின்றன. ஆனால், காலத்தால் தொன்மைவாய்ந்த ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பி யத்தில் முருகனும், திருமாலும், கொற்றவையும் பேசப் பட்ட போதிலும், சிவனைப் பற்றிய குறிப்புக்கள் வெளிப் படையாகக் காணப்படவில்லை. என்ருலும் சைவ சமய, தின் அடிப்படைகளாக விளங்கும் கடவுள், உலகம், உயிர் ஆகிய மூன்றைப் பற்றிய குறிப்புக்கள் காண்ப்படுவது அறியத்தக்கது. அவற்றுள் உலகம் பற்றிய குறிப்பு வருமாறு :- - -

  • நிலம் நீர்வளி விசும்போ டைந்தும் * - * து கலந்த மயக்கம் உல்கம்.’’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/20&oldid=729941" இலிருந்து மீள்விக்கப்பட்டது