பக்கம்:Sarangadara.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்சி-4) சாாங்க த ர ன் 19. சுக். மத. அழைத்துவாரும், ஏதாவது போக்குச் சொல்லி. பிறகு செய்யவேண்டிய காரியங்களை அப்புறம் சொல்லுகிறேன். உத்தரவுப்படி, நீ கூறியது ஞாபகமிருக்கட்டும். (யோகிருன்.) விதுரஷகனுகிய இவனது புத்தியெல்லாம் என்னே க் கானும் பொழுது எங்கேயோ பறக்கிறது. மோகவலையில் அகப்பட் டால் மழுங்கும் புத்தியென்பது உண்மைதான். இல்லா விடின் இவன் என்னே இச்சித்து இவ்வாறு புத்திகெட்டு நடப்பதாவது ! ஆயினும் நமக்கு உபயோகப்படுகிருன். அதுதான் நமக்கு வேண்டியது. (போகிருள்.) நான்காங் காட்சி. இடம்-நந்தவனம். காலம் -மா?ல. சித்திாாங்கி வருகிருள்: ஆ! என்ன ரமணியமாயிருக்கிறது. இந்த நந்தவனம் தென் றல் மெல்லென இங்குள்ள பாரிஜாதம், சண்பகம், நீலோற் பலம், முதலிய நறுமலர்களின் வாசனையை எங்கும் பாவச் செய்ய, தெளிந்த கிலவு சோலேயெங்கும் தன்னிறத்தாக்கி எவ்வெப் பொருள்களையும் இனிமையாய்த் தோன்றச்செய்ய, அன்றில் தன் பேடை நாட, இவைகளே யெல்லாம் பார்க் கும் பொழுதும் கேட்கும்பொழுதும், கினேக்கும்பொழுதும், எனக்குள்ள காதல் மேன்மேலும் அதிகரிக்கிறதே யொழியக் குறைந்த பாடில்லை. ஐயோ! நான் என்ன செய்வேன்? ஐயோ! ஜகதீசனே இப்படியும் என்னேத் தனித்தலைய விடு வாயோ இப்பருவத்தில் இவ்விளமை போயினபின் எனக் குச் சுகம் கிட்டி எதற்கு P-இன்னும் ஏன் எனது தோழி வரவில்லை? போன இடத்தில் காரியம் கைகூடுகிறதோ என்னவோ? ஐயோ ! என்னுயிர் தாமரை யிலையிற் பட்ட நீர்த்துளியைப்போல் தத்தளிக்கிறதே! இன்று எப்படியாவது நான் பிராணநாதனைக் காணவேண்டும். காணுவிட்டால் என் னுயிர் நில்லாது.-அதோ மதனிகை வருகிருள்! மதனிகா 1 மதனிகாl மதனிகை வருகிருள். அம்மா, காலெல்லாம் என்ன நோகிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/25&oldid=730044" இலிருந்து மீள்விக்கப்பட்டது