பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

© தெரு. மோடார் பஸ்ஸுகளும், ஜட்காவண்டிகளும் ஏராளி மாகக் கிடைக்கும் , ஹோட்டல்களுக்கும் குறைவில்லை. (2) திருக்கச்சி மியானம் -இக்கோயில், பெரிய கோயி லில் அ ட ங் கி யிருக்கிறது; ஸ்வாமிக்கு மயானேஸ்வரர் என்று பெயர் : பண்டா சூரன் பூசித்த ஸ்தலம் , பழய கோயில் மணற் கல்லாலாயது ; அதை இடித்து கருங் கல்லால் புதிதாய்க் கட்டப்பட்டிருக்கிறது ; கோயில் சிவ கங்கை குளத்தின் ஒருபுறம் இருக்கிற்து. பழய கோயில் 11 - ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாம். ஆதி காலத்தில் இக்கோயில் கிழக்கு பார்த்ததாக இருந்திருக்க வேண்டும் என்று எண்ண் இடமுண்டு. பண்டா சுரனே பரமசிவம் சம்ஹரித்த ஸ்தலமென்பர்; யாக குண்டமே சிவ கங்கை என்பர். சிலர் கச்சிமயானம் சர்வ திர்த்தக் கரையிலுள்ள தென்பர் சிலர். (3) ரிஷ்பேஸ்வரர் கோயில் :-இது சிவ க ங் ைக க் கு மேற்கிலுள்ள ஒரு சிறு கோயில் மணற் கல்லாலயது பெரும்பாலும். சுமார் 1300 வருடங்களுக்கு முன் கட்டப் பட்டிருக்கலாம். கோயில் மே ற்கு பார்த்தது ; இதற்கு பிரத்யேக பூஜை புண்டு. (4) கைலாசநாதர் கோயில்.:--இது சர்வ தீர்த்தத்திற்கு மேற்கிலுள்ளது; இரண்டு சிவாலயங்களடங்கியது. இதன் பூர்வீகப்பெயர் ராஜசிம்ம பல்லவேஸ்வரம் என்பதாம் ; ராஜசிம்மன் என்னும் பல்லவ அரசனுல் கட்டப்பட்டது. கட்ட ஆரம்பித்த வருஷம் 567 - ஆம், கட்டி முடிந்தது 670 - ம் ஆண்டில், இரண்டாவது காசிம்மன் அல்லது ராஜசிம்மன் காலத்தில். இங்குள்ள கர்ப்பக் கிரஹத்திற்கு எதிரில் காரதேஸ்வார் ஆலயம் என்று ஒரு சிவாலயமுண்டு ; இதற்கு முற்காலப்பெயர் மஹெக்திரேஸ்வரம்; மஹேந் திான் எனும் பல்லவ அரசனுல் கட்டப்பட்டதாம். பல்லவ வைரியாகிய குலோத்துங்க சோழன் காலத்தில், இக்கை லாசநாதர் கோயில் மூடப்பட்டு, இதன் மான்யங்களெல் லாம், இங்கு அருகாமையிலுள்ள அநேக த ங் கா. ப த ம் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டது. இக்கோயில் மிகவும் புராதனமானது ; கருங்கற்களால் கட்டப்பட்ட கோயில் களுள் மிகவும் முற்பட்டது. நடுவில் உயர்ந்த விமானம் உடையது; சுற்றிலும் 90 - சிறு அறைகள் அ ல் ல து 2 وهنامه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/12&oldid=730242" இலிருந்து மீள்விக்கப்பட்டது