பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 காஸ்மீரம் -வட இந்தியா. கா ஸ் மீ ர் ராஜ்யத்தி லுள்ளது. மார்த்காண்டேஸ்வரர் கோயில், ஸ்வாமி - விஜய ஈஸ்வரர். 34 துண்கள் உடையது. கிக்கா :-இதற்கு மற்ருெரு பெயர் மருகலு, மேற்கு இந்தியாவில் மேற்கு மலைத்தொடர் அருகிலுள்ளது சிவாலயம், ஸ்வாமி பெயர் சந்திரசேகரர், கோயிலுக்கு ரிஷ்ய சிருங்கேஸ்வரர் கோயில் என்று பெயர் உண்டு. ஸ்வாமிக்கு மற்ருெரு காமம் ரிஷ்யசிருங்கேஸ்வரர், லிங்கத்தின் இடது பாகம் ரிஷ்யசிருங்கரின் மனைவி சாந்தா தேவியின் சிலை யிருக்கிறது. லிங்கத்திற்கு இரண்டு சிருங்கங்கள் (கொம்பு கள்) உளது. ரிஷ்யசிருங்கர் இங்கு லிங்கத்தில் ஐக்கியமான தாக ஐதிகம். கோயிலைச் சுற்றி பல காத துர்ம் கருப்பே வராது என்பது ஐதிகம். கிருபாசாகரம் :-சென்னை ராஜதானி பனங்காட்டுருக்கு அருகிலுள்ளது. சிவாலயம், ஸ்வாமி கிருபாநாயகர், தேவி கிருபாநாயகி, புலஸ்தியர் பூசித்தது. கிருஷ்ணு :-சென்னை ராஜதானி, மேற்படி ஜில்லா ரெயில் ஸ்டேஷன், சிவாலயம். கிருஷ்ணுபுரம் -சென்னை ராஜதானி கடப்பை ஜில்லா, கடப்பைக்கு 5 மயில் வடக்கு சிவாலயம். ரெயில்வே ஸ்டேஷன் , உத்தரபி.நாகினி தீர்த்தம். கிக்கேரி -கிருஷ்ண ராஜ்பெட் தாலூகா, மைசூர் ராஜ் யம், சிவாலயம். ஸ்வாமி பிரம்மேஸ்வரர் ; கோயில் 1171-ஆம் வருஷம் கட்டப்பட்டது, சளுக்கிய சில்பம். கிடங்கில் :-திண்டிவனம் தாலூகா, தென் ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜதானி, பக்தபராதீஸ்வரர் கோயில் ; கல்வெட்டுகளில், திருவிறையான் கோயில் மஹாதேவர், திருக்கெளளிஸ்வரமுடைய மஹாதேவர், திருக்கவுரிஸ்வா முடைய நாயின்ர் என்றும் ஸ்வாமி பெயர் இருக்கிறது. கிடங்கரை :-காஞ்சீபுரம் தாலூகா, சென்னை ராஜதானி இரு புளிய மரங்களினிடையில் ஒரு பெரிய சிவலிங்கம் இருக்கிறது. லிங்கத்தின் எதிரில் சிவனுடைய சிலையும் ரிஷபமும் உண்டு. முற்காலத்திய சிவாலயம் கிலமாய் விட்டதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/25&oldid=730255" இலிருந்து மீள்விக்கப்பட்டது