பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஓர் கில அறையினின்றும் சில வருடங்களுக்கு முன் கடராஜமூர்த்தி முதலிய விக்ரஹங்கள் கண்டெடுக்கப் பட்டன. குரங்கனின் முட்ட ம்:-(திரு) சென்னே ராஜதானி, செங்கில்பட்டு ஜில்லா, காஞ்சீபுரத்திற்கு 6-மயில் தெற்கி லுள்ளது. வாலி பூசித்த கேஷத்ரம், ஸ்வாமி வாலீஸ்வரர் இறையார்வளையம்மை வாலிதீர்த்தம், நளகங்கை, குரங்கு (வாலி) + அணில் + முட்டம் (காக்கை) இவை பூ சி த் த ஸ்தலமாதலால் இப்பெயர் பெற்றது. கோயில் மிகவும் பழமையானது. பல்லவ கட்டடம். சுமார் ஏழாம் நூற்ருண் டில் கட்டப்பட்டிருக்கலாம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. குரங்காடுதுறை :-(திரு) (வடக்கு) வடகுரங்காடுதுறை என்று பெயர். கஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜகானி, ஐயம்பேட்டை ஸ்டேஷனுக்கு 4-மயில் வடமேற்கிலுள்ளது. விாலி பூசித்த கேஷத்திரம். ஸ்வாமி குலைவணங்கீஸ்வரர், அழகு சடைமுடிநாதர், தேவி குவலயநாயகி, அழகு சடை முடிய்ம்மை. காவிரி தீர்த்தம். இங்கிருந்த செங்கல் கோயிலே கண்டராதித்யர் மனைவியாகிய செம்பொன் மாதேவியார் கற்றளி (கருங்கல்லாலாகிய கோயில்) ஆக மாற்றினர்கள். கண்டராதித்யர் காலம் 10-ஆம் நூற்ருண்டின் மத்தியாகும்; பிரம்மோற்சவம் தை மாதம். குரங்காடுதுறை :-(.ெ த ற் கு) தென் குரங்காடுதுறை என்று பெயர். இதை ஆடுதுறை என்றும் கூறுவர் ; தென் இந்தியா ரெயில்வே ஸ்டேஷன் சென்னை ராஜதானி, சுக்ரீவன், அனுமார் மிருகண்டு ரிஷி பூசித்த கேஷத்திர மாம். ஸ்வாமி ஆபத்சகாயேஸ்வரர், தேவி பவளக்கொடி யம்மை, காவிரி தீர்த்தம், சகாய தீர்த்தம் ; பிரம்மோற்சவம் தை மாதம், திருஞானசம்பந்தர் திருநாவுக்காக பாடல் பெற்றது. குருகாவூர் :-(திரு) திருக்கடாவூர் என்றும் திருக்குருகாவூர் வெள்ளடை என்றும் வழங்கப்படுகிறது. சென்னே ராஜதானி தஞ்சாவூர் ஜில்லா, சீர்காழிக்கு 4-மயில் கிழக்கு. சுந்தாருக் கும் அவரது சிஷ்யர்களுக்கும் சிவபெருமான் கட்டுச் சோறும் தண்ணீரும் வழங்கிய ஸ்தலம், ஸ்வாமி வெள்ளடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/35&oldid=730266" இலிருந்து மீள்விக்கப்பட்டது