பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கோகர்ணம் -கைவல்யமடச் சிவாலயம். இம்மடத்தி ஸ்வாமியாரால் சில வருடங்களுக்குமுன் கட்டப்பட்டது. இங்குள்ள சிவலிங்கத்திற்கு சக்ரவர்த்திலிங்கம் என்று பெயர் இது ஒரு ஆங்கிலேயரால் சீமைக்குக் கொண்டுபோய் திருப்பி அனுப்பிக்கப்பட்டது. கோட்டாறு --(திரு) திருநள்ளாறு த்ென் இந்தியா ஸ்டேஷனிலிருந்து 3-மயில் வடமேற்கு வெள்ளேயான பூசித்த சிவாலயம்; ஸ்வாமி ஐராவதேஸ்வரர், தேவி வண்டார் பூங்குழலி யம்மை, சூரிய கீர்த்தம். கோச்செங்கண் னச் சோழனுல் கட்டப்பட்ட கோயில். கோட்டியூர் :-சென்னை ராஜதானி, மலையாள நாடு சிவாலயம். பிரம்மோற்சவம் சித்திரைமாதம், பரசுராமர் பூசித்த ஸ்தலம். - கோஷ்டியூர் :-சென்னை ராஜதானி, திருப்புத்துனருக்கு 5 மயில் , இங்கு பிரபலமான விஷ்ணு ஆலயத்திற்குள் சிவாலயம் ஒன்றுளது. ஸ்வாமி சாபலிங்கர் இங்குத் தெப்பக்குளத்தருகில் பைரவனுர் எனுமிடத்தில் ஒரு சிவாலயமுண்டு. ஸ்வாமி மெஞ்ஞானர், தேவி பாகம் பிரியாள். கோட்டுர்;-(திரு) சென்னை ராஜதானி, மன்னர்குடி ஸ்டேஷனுக்கு 10 மயில் தெற்கு. குச்சாரிஷி பூசித்த கேஷத்ரம். ஸ்வாமி கொழுந்தீஸ்வரர், தேவி மதுரவசனம் பிகை, அ. மிர்த தீர் க் த ம் , திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. கோட்டைக்குப்பம் :-சென்னே ராஜதானி, சிவாலயம் ஸ்வாமி புண்யகோடீஸ்வரர். தேவி அன்னபூரணி, புண்ய கோடி தீர்த்தம். கோட்டையம் :-திருவாங்கூர் ராஜதானி, ஹ வரி க் குன்றம் சிவன்கோயில். - கோட்டையூர் :-திருமெய்யம் காலூகா புதுக்கோட்டை சமஸ்தானம் சிவாலயம், பழய கோயில், பாண்டிய காட வர்மன் காலத்திய கல்வெட்டு இங்கு ஒன்றுளது. இதற்குக் கோட்டுர் என்றும் பெயர். கோட கருங்ளகும் :-திருநெல்வேலி ஜில்லா, சென்னை ராஜதானி, நாங்குநெறி காஅாகா, சிவாலயம், ஸ்வாமி ராஜசிம்மேஸ்வரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/50&oldid=730283" இலிருந்து மீள்விக்கப்பட்டது