பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 கோடகெரி -உடுப்பி காலுகா, சென்னை ராஜதானி தென் கன்னட ஜில்லா, பாரக்பூர் அருகிலுள்ளது. பஞ்ச லிங்கேஸ்வரர் கோயில். கோடப்பகொண்டா :-குண்டுர் ஜில்லா, சென்னை ராஜ தானி, காசராவ் பேட்டைக்கு 10 மயில், சிவாலயம் சிறு குன்றத்தில் இருக்கிறது; பூமி மட்டத்திற்கு 600 அடி உயரம், புராதன கோயில், மாசி மாசம் பிரம்மோற்சவம், சிவராத்ரி விசேஷம், ஸ்வாமி திரிகோடீஸ்வரர். மலைமீது ஒரு சத்திரம் உண்டு. - கோடி -திருக்கோடி, குழகர் கோயில், குழவர் கோயில் எனவும் வழங்கப்படுகிறது. சென்னை ராஜதானி, திருத்தரு பூண்டி ஸ்டேஷனிலிருந்து 32 மயில்; சிவாலயம், ஸ்வாமி அமிர்தலிங்கேஸ்வரர் (அமிர்கத்திலிருந்து உத்பவித்தவர்) தேவி மையார் தடங்கண்ணியம்மை, அமிர்த தீர்த்தம ; வேதாரண்யத்திற்கு 6 மயில். சுந்தரர் பாடல் பெற்றது. வாயுதேவர் பூசித்த ஸ்தலம். கோடிக்கரை :-(திரு) வேதாரண்யத்திற்கு 8 மயில், சென்னை ராஜதானி, இதற்கு ஆதி சேது என்றும் பெயர். பூநீராமர் பூசித்த கேஷத்திரம். இங்குள்ள சிவாலயத்து சுப்பிரமணியருக்கு 6 கரங்கள் தானுள ; இடது கரம் ஒன்றில் அமிர்த கலசம் வைத்துளார். ஸ்வாமி அமிர்த கடேசர் தேவி மையார்கடங்கண்ணி. வருணன் பூசித்த ஸ்தலம் , சுங்தரமூர்த்தி நாயனர் பாடல் பெற்றது. கோடிகா -திருக்கோடிக்காவல் என்று வழங்கப்படு கிறது; சென்னை ராஜதானி, திருவிடைமருதுருக்கு 1 மயில் கிழக்கு, மூன்று கோடி ரிஷிகள் பூசித்த ஸ்தலம். ஸ்வாமி திருக்கோடீஸ்வரர் அல்லது கோடிக்கா ஈஸ்வரர், தேவி வடிவாம்பிகையம்மன், காவிரிநதி அகஸ்திய தீர்த்தம், திரு ஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பாடல்பெற்றது. கோடி தீர்த்தம் :-நெல்லூர் ஜில்லா சென்னை ராஜகானி கோடேஸ்வர ஸ்வாமி கோயில், முக்கிய உற்சவம் மாசி மாதம் ; கல்யாண உற்சவம் விசேஷம். சுயம்புலிங்கம். கோடிபல்லி -கோதாவரி ஜில்லா, சென்னே ராஜதானி சோமேஸ்வரர் ; கோயில் சந்திரன் தாரையைச் சேர்ந்த பாபம் தீரக் கட்டிய கோயில் என்பது ஐதிகம். இங்கு கோடீஸ்வரர் கோயில் என்றும் ஒரு சிவாலயமுண்டு. 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/51&oldid=730284" இலிருந்து மீள்விக்கப்பட்டது