பக்கம்:Siva Shrines In India and Beyond Part-2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கிருஷ்ணராஜ உடையார் புதுப்பித்தார். இக்கோயிலின் வெளிப்பிராகாரத்தில் பல தேவதைகளின் உருவங்கள் அ மைக் க ப்ப ட் டிருக் கின்றன. ஸ்வாமி பெயர் சாமராஜேஸ்வரர். சாமராஜ்பேட்தாலுக்க :-மைசூர் ராஜ்யம், காவேரி சங்கரர் கோயில் ; காவிரியும் ஹேமவதியும் சங்கமமாகும் இடம். சாமன்னு :-திருச்சாமன்னு என்று வழங்கப்படுகிறது. சென்னை ராஜதானி மலையாளத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயம் ; ஆயினும் கோயிலுக்கு விவாமானம் முதலியவை கிடையாது. ஒரு காட்டின் நடுவில் அடுக்கப் பட்ட கருங்கற்களின்மீது சிவலிங்கம் இருக்கிறது. வைகாசி மாதம் 28 நாட்கள் இதற்குக் திருவிழா. மற்ற காலங்களில் பூ ைச கிடையாது. திருவிழாவின்போது நாயர்களும் யேர்களும், ஆயிரக்கணக்காக வருகிருர்கள். நாயர்கள் சுமார் 5000 கெய்க்குடங்களே அபிஷேகம் செய்கின்றனர். இதன் பிறகு கீயர்கள் ஸ்வாமிக்கு இளநீர் அபிஷேகம் செய்கின்றனர். இங்கு க ட் சயா கம் கடந்ததென்பது ஐதிகம் லிங்கத்தில் வடுபட்டு இாக்கம் பெருகியதாகவும் ஐதிகம். சாமுண்டி மலை :-மைசூர் ராஜ்யம், மைசூரிலுள்ளது. இங்கு மலேமீது ஒரு சிவாலயமுண்டு, ஸ்வாமி ம ஹ ச பலேஷ்வர். சாய்க்காடு :-(திரு) ச | ய | வ ண ம் என்றும் பெயர் சென்னை ராஜகானி, சீர்காழிக்கு 9 மயில் தெற்கு, உப மன்யு பூசித்த கேஷத்ரம், இயற்பகை நாயனுர் முக்திபெற்ற ஸ்தலம், காசிக்கு சமானமான கேடித்ரம் என்று ஸ்தல புராணம் கூறுகிறது. சிவாலயம் ; ஸ்வாமி சாயவனேஸ்வரர் கேவி குயிலினுகன்மொழி யம்மை ; சாயாதீர்த்தம், காவிரி தீர்த்தம் , திருஞான சம்பந்தர் பாடல்பெற்றது. இங்குள்ள பல்லவனீஸ்வரர் கோயில் என்பது பல்லவ கட்டிடமன்று. சாயல்குடி :-ராம்காட் ஜில்லா, சென்னை ராஜதானி, பழய சிவாலயம். ஸ்வாமி சொக்கநாதர் ; கோயில் அயகிரி மஹரிஷியால் கட்டப்பட்டதென்பது ஐதிகம். சார்நாத் :-வடஇந்தியா, காசிக்கு 3 மயில் அருகிலுள்ள கேஷத்திரம் ; சிவாலயம் ஸ்வாமி சாரங்கநாதர் விஸ்வேசர் ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-2.pdf/66&oldid=730300" இலிருந்து மீள்விக்கப்பட்டது