பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 செம்மங்குடி :-சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா திருவாரூருக்கு 5 மைல்.இங்கு 2 கோயில்களுண்டு, அபி புக்தேஸ்வரர் கோயில், சோழபுரீஸ்வரர் கோயில். செய்யூர் :-சென்னை ராஜதானி, செங்கல்பட்டு ஜில்லா, மதுராந்தகம் தாலூகா, அச்சிறுபாக்கத்திற்கு 7 மைல் சிவாலயம். ஸ்வாமி வன்மீகநாதர், தேவி பார்வதி, வராஹ தீர்த்தம், கோயில் சோழ கட்டிடம், இங்கு கைலாச நாதர் கோயில் என்று மற்ருெரு கோயில் உண்டு. சென்னபட்டணம் :-(மதராஸ்) சென்னை ராஜதானி. இங்குள்ள கோயில்களெல்லாம் தற்கால திராவிட சில்ப மமைந்தவை. சிவாலயங்கள் (1) சென்னை மல்லிகேஸ்வரர் கோயில், இது பழைய இலட்அவுஸ் இருந்த இடத்திலிருங் தது, கிழக்கு இந்திய் கம்பெனியார், லேட்அவுஸ் அவ்விடம் கட்டுவகற்காக, அதை எடுத்துவிட்டு, தற்காலம் புஷ்பக் கடையிருக்கும் சைன பஜார் வீதியில் கட்டிக்கொடுத்தனர். இது நடந்தது சுமார் 1760-ம் வருடம். இது மணலி முத்து கிருஷ்ண முதலியார் முயற்சியில்ை நடந்தது. இதற்குப் பக்கத்தில் சென்னை கேசவ பெருமாள் கோயில் இதே மாதிரியாகக் கட்டப்பட்டது. இவைகளிரண்டிற்கும் கடுவில் பொதுவான குளம் உண்டு. இரண்டு கோயில்களுக்கும் ாதம் ஒன்றே. ஸ்வாமி சென்னை மல்லிகேஸ்வரர்பிரம்மோற்சவம் பங்குனி மாதம் (2) பூரீ ஏகாம்பரீஸ்வரர் கோயில், பெத்துநாய்க்கன் பேட்டையிலுள்ளது. ஸ்வாமி ஏகாம்பரநாதர், தேவி காமாட்சி அம்மன்-பிரமோற்சவம் பங்குனிமாதம். 300 வருடங்களுக்குள் கட்டப்பட்டது. (3) மல்லீஸ்வரர் கோயில் லிங்கசெட்டி தெருவில் முத்தி யாலு பேட்டையிலுள்ளது. சுமார் 300 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. ஸ்வாமி மல்லீஸ்வரர், தேவி சுவர் ணும்பிகை. இக்கோயில் செட் டிமார்களால் கட்டப்பட்டது, பிரம்மோற்சவம் பங்குனி மாதம். (4) கச்சாலிஸ்வரர் கோயில் முத்தியாலுபேட்டையில் அரமனைக்காரன் தெருவி லுள்ளது. புதிய கோயில், ஸ்வாமி கச்சாலீஸ்வரர், தேவி செளந்தர நாயகி. பிரம்மோற்சவம் சித்திரை மாதம் (5) காசி விஸ்வநாதர் கோயில் கிருஷ்ணுங் குளத்தருகில் உள்ளது, ஸ்சாமி விஸ்வநாதர், தேவி விசாலாட்சி, புதிய 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/11&oldid=730322" இலிருந்து மீள்விக்கப்பட்டது