பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 பெயர் தளவனபுரம், ஸ்தலபுராணத்தில் இதற்கு கஜாரண்ய rேத்திரம் என்று பெயர் உளது. நலன், மாடன் எனும் இரண்டு வேடர்கள் பூசித்த ஸ்தலமாதலால் கலக்காடு எனப் பெயர்பெற்றதென்பது ஸ்தலபுராணம். இது மிகவும் புராதன் மான பட்டணம். கங்கை அரசர்கள் மூன்றும் நூற்ருண்டில் ஆண்ட இடம். ஆகவே இக்கோயில்களும் மிகவும் புராதன மானவை. வைதீஸ்வரன் கோயில் மிகவும் பழமையானது. கோயில் கிழக்கு பார்த்தது. வெளிப்பிராகர்ரம் பின்னல் விஜயநகர அரசர்களால் கட்டப்பட்டது, ஸ்வாமி வைதீஸ் வரர், தேவி மனேன்மணியம்மன். கோயில் துவாரபாலகர் கள் 10 அடி உயரம். மல்லிகார்ஜுனர் கோயில் சோம கிரியின் உச்சியிலுள்ளது. குன்று. 850 அடி உயரம். தேவி, ஸ்தல புராணத்தின்படி சாமுண்டி, சாதாரணமாக பிரமராம்பிகை என அழைக்கப்படுகின்றது. கோயிலில் ஒரு அழகிய சித்திர மண்டபமுண்டு. அர்க்கேஸ்வரர் கோயில் விஜயபுரத்திலிருக்கிறது, கோயில் பிற்காலத்தியது, சிறியது. இங்கு கெளரிசங்கரர் கோயில் என்னும் ஒரு சிவாலய முண்டு, கல்வெட்டுகளில் இதற்கு மல்லேசர் என்று பெயர். இது மைசூர் சிக்கதேவராய உடையார் என்பவரால் 1706-ம் ஆண்டில் கட்டப்பட்டது. சக்கேஸ்வரர் கோயி லுக்கு மார்ணேஸ்வரர் கோயில் என்றும் பெயர் உளது. வைதீஸ்வரர் கோயில் தெற்கில் வீரபத்திரர் கோயில் உண்டு. இங்குள்ள கல்வெட்டுகளில் இங்கு ராஜராஜேஸ்வரம் என்று ஒரு கோயில் இருந்ததாகச் சொல்லப்பட்டிருக் கிறது. கோகர்ண தீர்த்தக்கருகில் கோகர்ணேஸ்வரா கோயில் என்று ஒரு சிறு சிவாலயமுண்டு. வைதீஸ்வரன் கோயிலின் பின்யாக்ம் சாளுக்கிய கட்டிடமாகத் தோன்றுகிறது. முன் பாகம் பிற்காலம் புதுப்பிக்கப்பட்டதா யிருக்கலாம். தலைக்காவேரி :-மைசூர் ராஜ்யம், மைசூருக்கு 85 மைல் சிவாலயம், ஸ்வாமி அகஸ்தீஸ்வரர். இங்குதான் காவிரிகதி ஆரம்பமாகிறது. காவிரி தீர்த்த ஸ்நானம் விசேஷம். தேவார வைப்பு ஸ்தலம். . தலைச்சங்காடு -(திரு) சென்னை ராஜகானி, தஞ்சாவூர் ஜில்லா, திருவலம்புரத்திற்கு 1 மைல் தென் மேற்கு. மாயவரத்திலிருந்து 12 மைல்; சீர்காழியிலிருந்து 10 மைல். ஆக்கூர் ஸ்டேஷனிலிருந்து 2 மைல், மஹாவிஷ்ணு பூசித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/23&oldid=730334" இலிருந்து மீள்விக்கப்பட்டது