பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 திருச்சாற்றுறை:-தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜ தானி, உடையவனேஸ்வரர் கோயில். - திருச்சானுர் :-வட ஆற்காடு ஜில்லா, சென்ன் ராஜ தானி. இது சிறுத்தான்ர் என்றும் வழங்கப்படுகிறது. சிவாலயம் ஊரின் மேற்குபாகம் உள்ளது. இப்பாகத்திற்கு போகிமங்கலம் என்று பெயர். ஸ்வாமி பெயர் திப்பலா ஸ்ேவரமுடைய மஹாதேவர் என்று கல்வெட்டுகளில் இருக் கிறது. தற்காலம் ஸ்வாமி பெயர் பராசரேஸ்வரர் என்று வழங்கப்படுகிறது. இவ்வூருக்கு கல்வெட்டுகளில் பழைய ப்ெயர் திருச்சோகினூர் என்றிருக்கிறது. பழைய கோயில்; சுமார் 1000 வருடங்களுக்கு முற்பட்டது. திருச்சுனே :-கருங்காலக்குடி என்றும் பெயர் உளது. மதுர்ைஜில்லா, மேலூர் காஇாகா, சென்னை ராஜதானி, மேலுளருக்கு 8 மைல். சிவாலயம் ஒருசிறு குன்றின்மீதுளது. ஸ்வாமி அகஸ்தீஸ்வரர். - - - - - திருச்சூர்-கொச்சி தேசத்தின் தலைநகர். சிவாலயம் மலைய்ாள் தேசத்திலுள்ள சிவாலயங்களுக்குள் மிகவும் பிரபலமானது. விசாலமான கோபுரங்களுடையது.இங்கு கூத்தம்பலம் எனும் சபாமண்டபம் உளது, பெரும்பாலும் மரத்தாலாயது-வடக்குநாதர் கோயில். ஸ்வாமி வடக்கு நாகர், தேவி பார்வதி, பரசுராமர் பூசித்த ஸ்தலம். பெரிய் உற்சவம் சித்திரை ம்ாதம். சிவராத்திரி மிகவும் விசேஷம். கேரள தேசத்தில் இதுதான் மிகவும் புராதனமான கோயில், இங்கு முசாபர் பங்களா உண்டு. திருத்தணிகை-வட ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜ தானி, ரெயில் ஸ்டேஷன் வீரட்டானேஸ்வரர் ஆலயம். ரெயில் ஸ்டேஷனுக்கு அருகாமையில் கிழக்கிலுள்ளது. கோயில் 9-ம் நாற்ருண்டின் கடைசியில் பல்லவு அரசன் அபராஜிக் என்பவர் காலத்தில் இருந்த கம்பிஅப்பி என் பவரால் கட்டப்பட்டது. பல்லவ சிற்பமமைந்தது. விமானம் 4: கஜம் சதுரம்; கர்ப்பக்கிரஹம் சதுரம்; மேல்பாகம் கஜப்பிருஷ்ட ஆகிருதி; கிழக்குபார்த்தது; ஜன்னல்கள் இல்லை; போதிக்கிட்டைகள் வளைவு உடையன. லிங்கத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/35&oldid=730347" இலிருந்து மீள்விக்கப்பட்டது