பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 திருப்பத்தூர்-வட ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜ தானி, ரெயில் ஸ்டேஷன், சிவாலயம். ஸ்வாமி பிரம்மேஸ் வரர், தேவி பிரஹந்நாயகி, பிரம்மோற்சவம் பங்குனி மாதம். பிரம்மா பூசித்த ஸ்தலம், ஆகவே இதற்கு பிரம்ம புரி என்றும் பெயர் உளது. திருப்பத்துர் -லால்குடி தாலூகா, திருச்சிராப்பள்ளி ஒல்லா, சென்னை ராஜதானி, பிட்சாண்டார் கோயிலி லிருந்து 12 மைல். கோயில் பல்லவ கட்டிடம். ஸ்வாமி திருத்தளிகாதஸ்வாமி. திருப்பதி-வட ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜதானி, கபிலேஸ்வர் கோயில், கபில தீர்த்தம். மலையின் கீழ்பாகம் கோயில். இது ராயன் ராஜேந்திர சோழன் அல்லது பிரம்மராயன் முனயதாயன் என்பவரால் கட்டப்பட்டது. திருப்பதிக்கு 1க் மைல் துனாம். கோயிலில் 1013-1045-ம் வருடத்தில் ஆண்ட ராஜேந்திர சோழன் காலத்திய கல் வெட்டொன்றுளது. கபில தீர்த்தம் தற்காலத்தில் ஆழ்வார் தீர்த்தம் அல்லது சங்கு கீர்த்தம் என வழங்கப்படுகிறது. சிவதீர்த்தமாயிருந்தது, 1581-ம் வருடம் விஜயநகரத்தாசர் ஒருவரால் வைஷ்ணவ தீர்த்தமாக மாற்றிப்பட்டது. கல் வெட்டுகளில் ஸ்வாமி பெயர் கபிலேஸ்வரமுடைய நாயனர் என்றிருக்கிறது. திருப்பதி மேலமலைக் கோயிலும் ஆதியில் சிவாலயமாயிருந்ததென்பர். ஸ்டுவர்ட் என்பவர் எழுதிய டில்டிரிக்ட் மான்யுவல் புஸ்தகத்தில் ஆதியில் இக்கோயில் சைவகோயிலாயிருந்ததெனக் கூறியிருக்கிருர் ராமானுஜர் இதை வைஷ்ணவ ஆலயமாக மாற்றியதாக எண்ணக் கார ணங்கள் உள. பூர்வீக சிவாலயம் தொண்டைமான் சக்ர வர்த்தியால் கட்டப்பட்டதென்பர். மூல விக்ரஹத்திற்கு ஜடையும், சர்ப்பாபரணமும் நெற்றிக்கண்ணும் உண்டு. தற்கால மிருக்கும் சங்கு சக்கிரங்கள் தொடுப்புகள் என்பர். திருப்பரப்பு-திருவாங்கூர் ராஜ்யம், சிவாலயம். திருப்பறையாறு :-திருவாங்கூர் ராஜ்யத்தில் வடக்கு பாகத்திலுள்ளது, சிவாலயம். - - திருப்புடைமருதூர் :-சென்னை ராஜதானி, தி ரு .ெ ல், வேலி ஜில்லா. சிவாலயம், ஸ்வாமி புடார்ச்சுன புரேஸ்வரர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/37&oldid=730349" இலிருந்து மீள்விக்கப்பட்டது