பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

šÓ சப்தரிஷிகள் சிலைகளும் உண்டு. மலை உச்சியில் போகக் திஸ்வரர் கோயில் உளது. உச்சிக்குப் போக 1775 படிகள். இக்கோயில் பல்லவ அரசர்கள் காலத்திற்கு முந்தியது என்று சிலர் எண்னுகின்றனர். கோயில் சிலகாலம் ஜைன ஆலயமாயிருந்ததென எண்ணுவதற் கிடமுண்டு. பூர்வபெயர் நந்தகிரி. சோழர்கள் இதை நந்தகிரி, கந்தி துர்க்கம் என்று மாற்றினர். இவ்வாருயின் இங்குள்ள சி வா ல யங் க ள் 11-ம் நூற்றண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஸ்டேஷனுக்கும் சுல்தான் பேட்டைக்கும் அருகில் மற்ருெரு சிவாலயமுண்டு. - கந்திகிராமம் -வட இந்தியா, அயோத்தியிலிருந்து 14 மைல் அாரம், கெளரிசங்கர் மஹாதேவர் சிவாலயம். கந்தியால்-சென்னை ராஜதானி ரெயில் ஸ்டேஷன் சிவாலயம். ஸ்வாமி மஹாதேவர், மங்கள தீர்த்தம். கந்திவனம் :-இதற்கு நந்திகேஸ்வரம் என்றும் பெயர். சென்னை ராஜதானி, செங்கல்பட்டு ஜில்லா, கூடுவாஞ் சேரிக்கு ம்ைல் தூரம் சிவாலயம். ஸ்வாமி நந்தீச்சுரர், தேவி செளந்தர நாயகி. நந்தி தீர்த்தம். கந்தி பூசித்த ஸ்தலம். கங்கிலம் :-(திரு) கக்கிலத்துப் பெருங்கோயில் என்பது தேவரா நாமம், மதுவளம் என்றும் பெயர். தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன். கோயில் ஸ்டேஷனுக்கு 3 மைல் மேற்கி லுளது. ஸ்வாமி மதுவனேஸ்வரர், பிரகாசநாதர், தேவி மதுவனநாயகி, பிரகாசநாயகி. சூரிய காங் த கீர்த்தம். கோயில்கட்டு மலைமீதுளது. சூரியன் பூசித்த ஸ்தலம். கோச்செங்கட் சோழன் திருப்பணிசெய்த ஸ்தலம். பிரம் மோற்சவம் சித்திர்ை மாதம். சுந்தார் பாடல்பெற்றது. இதற்கு 13 மைல் துரத்தில் திருக்கொண்டீச்சரம் எனும் சிவாலயமுளது. சிறிய ஆலயம் 200+100 அடி விஸ்தீ ாணம், ஒரே பிராகாரமுட்ையது. இங்குள்ள அர்த்தமண்ட பத்திலுள்ள விங்கத்தின் வலதுபுரம் ஒரு தேன்கூடு உளது இது விசித்திரமானது. இதிலுள்ள தேனிக்கள் ஒருவரை யும் ஹிம்சிப்பதில்லை. இதற்கு தினம் பூசை நடக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/50&oldid=730364" இலிருந்து மீள்விக்கப்பட்டது