பக்கம்:Siva Shrines In India and Beyond Part-3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பண்டில் கண்ட் பிரிவு:-வட மேற்கு மாகாணம், வட இந்தியா. இங்கு பல சிவாலயங்கள் உள. (1) அஜேகர் கிராமம் சிவாலயம், பஞ்சமுக லிங்கம். (2) மீரட் பிரிவு மாயூர் கிராமம். மாயா தேவியின் கோயிலுக்கருகில் ஒரு கிலம்ாய்ப்போன சிவாலயமுண்டு. (3) ஆக்ரா பிரிவு ஈடா ஜில்லா, அத்ாஞ்சிகோா ಟ್ವೆಗ್ಗಿ சிவாலயம் பாழடைக் திருக்கிறது. மண்மேட்டின் மீது 5 சிவ லிங்கங்கள் உள; அதில் ஒன்று 6 அடி உயரம். (4) ஷிகோபாத் கிராமம், சிவா லயம்-பஞ்சமுக மஹா தேவர் கோயில். பண்டரீ புரம் :-மத்ய இந்தியாவிலுள்ளது ; ரெயில் ஸ்டேஷன். (பிரபல விஷ்ணு ஸ்தலம்) வாடிஹ-ட்கி, ஷோலாபூர், குருட்வாடி மார்க்கமாய்ப் போகவேண்டும். சிவாலயம்-ஸ்வாமி மல்லிகார்ஜுனர், விட்டலர் கோயிலின் மஹாதுவாரத்திலிருக்கிறது. ராம சங் திர சதாசிவன் என்பவரால் கட்டப்பட்டதென்பர். அன்றியும் விட்டல மூர்த்தியின் சிரசில் சிவலிங்கம் உண்டென சிலர் எண்ணு கின்றனர்; அன்றியும் இக் கோயிலில் சித்தி வியைக மூர்த்தி யுண்டு. காள பைரவரின் தேவாலய முண்டு. மேலும் அருகாமையில் முரளீதரர் தேவாலயத்தைச் சார்ந்ததாய் வெள்ளைக் கல்லாலாய மஹாதேவ மூர்த்தியுளது. இது இரண்டாம் பேஷ்வா பாவா ஜிராவால் ஸ்தாபிக்கப்பட்டது. இங்குள்ள புண்டலீகன் கோயிலிலும் ஒரு சில லிங்கம் உண்டு. இதற்கு பித்தளே கலசமணிவித்து நகை வஸ்திரங் களால் அலங்காரம் செய்கின்றனர். பண்டளகல்லூர் :-தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜ தானி சிவாலயம். இங்குள்ள வெண்கல பிட்சாடன மூர்த்தி பார்க்கத் தக்கது. பண்ணியூர் :-மலையாளம் ஜில்லா, சென்னை ராஜ தானி. இங்குள்ள வாரஹ மூர்த்தி கோயிலுக்குள் ஒரு சிவ சங்கிதி யுண்டு. - பணகுடி -திருநெல்வேலி ஜில்லா, சென்னை ராஜ தானி - சிவாலயம். பணமலை :-விழுப்புறத்திற்கு 15 மைல் தென் மேற்கு; தென் ஆற்காடு ஜில்லா, சென்னை ராஜதானி. சிவாலயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-3.pdf/72&oldid=730388" இலிருந்து மீள்விக்கப்பட்டது