பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 பாஞ்ச மஹால் பிரிவு -பம்பாய் ராஜதானி, தேவ்கே தார் கிராமம்,கேதாரேஸ்வரர் கோயில். இங்கு லீலாவதி கிராமத் தில் ஒரு சிவாலயமும் தாவர எனும் கிராமத்தில் ஒரு சிவாலயமு முண்டு. பாசலூர் -சென்னை ராஜதானி, தஞ்சாவூர் ஜில்லா, வீரட்டேஸ்வர ஸ்வாமி கோயில்; தர்மபுர ஆதீனத்திற்குட் பட்டது. - பாட்னு பிரிவு :-வங்காள ராஜதானி, பைகுண்ட்யூர் கிராமம். இங்கு மிகவும் பழன்மயான ஓர் சிவாலய முண்டு, பாடாஸ் :-பூ ைஜில்லா, பம்பாய் ராஜதானி, நாகேஸ் வரர் கோயில்; 200 வருஷங்களுக்கு முன் கட்டப்பட்டது. பாடி :-இதற்கு திருவலிதாயம் என்று தேவாரப்பெயர். சென்னை ராஜதானி, வில்லிவாக்கம் ஸ்டேஷனுக்கு 13 மைல் தென் மேற்கு. பராத்வாஜர், பிரகஸ்பதி, ஹனுமார் பூசித்த ஸ்தலம். ஸ்வாமி-வலிதாய நாதர் அல்லது திரு வல்லீஸ்வரர், தேவி-தாயம்மை அல்லது ஜெகதாம்பிகை. பாரத்வாஜ கீர்த்தம், ஹனும தீர்த்தம். விக்ரம சோழன் ஸ்வாமியை பூசித்து மகப்பேறு பெற்ற கேஷத்திரம், பலி + தாயம் = வலி தாயம் என்ருயிற்றென்பர் பலி= பூசை, பாண்டிக் கொடு முடி :-கொடுமுடி யெனவும் வழங்கப்படு கிறது. தென் இந்தியா ரெயில் ஸ்டேஷன், திரிமூர்த்தி களுக்கு இங்கு கோயில் உண்டு. ஸ்வாமி-கொடுமுடி நாதேஸ்வரர், மகுடேஸ்வரர், தேவி-பண்மொழி நாயகி யம்மை, திரிபுர சுத்தரி,வன்னி விருட்சம், காவிரி நதி, சுந்தரர் நமச்சிவாயத் திருப்பதிகம் பாடிய ஸ்தலம்.ஸ்டேஷ லுக்கு 1 பர்லாங்கில் சத்திரம். மூவர் பாடல் பெற்றது. பாண்டர் :-மத்ய இந்தியா, சண்டா ஸ்டேஷனுக்கு 18 மைல் சிவாலயம் - பத்ரேசர், பத்ராவதி தேவி. பாணவர்-மைசூர் ராஜ்யம் சிவாலயம், ஸ்வாமி.மஹா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/15&oldid=730405" இலிருந்து மீள்விக்கப்பட்டது