பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 வெட்டும், சிலந்தியப்பர் கோயிலில் ஒரு கல் வெட்டும் உளது. அகஸ்தியர், இந்திரன், காசிபர், விராட்டு, பூசித்த ஸ்தலம்; ஒரு பிராம்மணன் தன் தாய் தந்தையரைக் கொன்ற பழி நீங்கிய ஸ்தலமென்பர். முக்கிய உற்சவம் பங்குனி மாசம். பாண தீர்த்தத்தில் ஆடி அமாவாசை ஸ்நானம் விசேஷம். பாம்புரம் :-(திரு) திருப் பாம்பு புரம் எனவும் பெயர் உண்டு. சென்னை ராஜதானி , பூந்தோட்டம் ஸ்டேஷ இக்கு 3 மைல் மேற்கு கோயிலில் நாகராஜன் சிலை யிருக்கிறது; ஆதிசேஷன் பூசித்த ஸ்தலம். சுவாமி. பாம்பீஸ்வரர், தேவி-வண்டார் பூங்குழலியம்மை, வன்னி விருட்சம்; திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. பாயர் :-காஷ்மீர் ராஜ்யத்திலுள்ளது, மிகவும் சிறிய கோயில்; 8 அடி சதுரம், 21 அடி உயரம். நான்கு பக்கமும் நான்கு வாசம் படிகள் உள. கோயில் ஆறே ஆறு கற்களாலாயது. சுமார் 950-u கட்டப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. காபூலை ஆண்ட பீமசாஹி எனும் அரசல்ை கட்டப்பட்ட பீமகேஸ்வரர் கோயிலா யிருக்கலாம் என்று நினைக்கப்படுகிறது. கோயில் கிரேக் கர்களிடமிருந்து வந்த காந்தார சில்பமுடையது. பார்னியோ :-இது சிங்கபூருக்கு அப்பாலுள்ள ஓர் தீவு. இங்கு ஒர் குகையில் சிவாலயமுண்டு; கிலமாயிருக் கிறது. கணேசர், நந்தி முலலிய சில சிற்பங்கள் இன்னும் இருக்கின்றன. பாயில்:-பாடியாலா ராஜ்யத்திலுள்ளது. பஞ்சாப் மாகாணம்; சிவாலயம். சுவாமி - மஹாதேவர், தேவிபார்வதி. பாராகாட் ;-வட இந்தியா, மீர்கன்ஜ் ஸ்டேஷனுக்கு 3 மைல்; சிவாலயம், நர்மதை தீர்த்தம். - பாராவுட்:-பஞ்சாப் மாகாணம், ஜின்ட் சமஸ்தானம். இங்குள்ள சிவாலயங்கள் (1) பாராவுட் கிராமம் சிவாலயம் (2) சாபிடான் கிராமம் சிவாலயம், சுவாழி - நாகேஸ்வர் மஹாதேவ், தேவி - நாகதமனி லிங்கம் ஜெனமேஜய 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/19&oldid=730409" இலிருந்து மீள்விக்கப்பட்டது