பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 யிருக்கிறது. கோபுர ஸ்தாபிகள் எடுத்துவிடப்பட்டன. அப்பர் பாடல் பெற்றது, பாலை வனம் --சென்னை ராஜதானி, பொன்னேரியி லிருந்து 11 மைல்-சிவாலயம். விங்கம் வெண்கிற முடை யது. திருப்பாற் கடலைக் கடைந்த போது தெறித்த பால் துளிகளாலாய தென்பது ஸ்தல புராணம். லிங்கம் வடு பட்டது; சூடான அபிஷேகம் செய்யக்கூடாது. கர்ப்பக் கிரஹம் கஜப்பிருஷ்ட ஆகிருதி. பிரம்மொற்சவம் பங்குனி மாசம். பாங் ககர் -வட இந்தியா ரெயில் ஸ்டேஷன், சிவா லயம். பாவஞ்சா :-மங்களுர் தாலுகா , தென் கன்னட ஜில்லா, சென்னை ராஜதானி. மஹா வில்வேஸ்வரர் கோயில். பாளையங் கோட்டை -சென்னை ராஜதானி, திருநெல் வேலி ஜில்லா, சிவாலயம் திரிபுராந்த்கர் - விசாலாட்சி, வைப்புஸ்தலம். பாவசாரி :-பம்பாய் ராஜதானி, மஹாதேவர் ஆலயம். பாழல்-சென்னை ராஜகானி, சிவாலயம். ஸ்வாமி. சுந்தரேஸ்வார், தேவி-பார்வதி. பாறி வைஜகாதர் கோயில்:-பான மாடத்திலிருந்து புறப்பட்டு பாமணி ஸ்டேஷனிலிறங்கி 12 மைல் போக வேண்டும், சிவாலயம். பாற்றுறை -(திரு) சென்னை ராஜதானி, திருவெறும் பூருக்கு 4 மைல் வட கிழக்கு. மார்க்கண்டேயர் பூசித்த பொழுது அபிஷேகத்திற்குப் பால் கிடைக்காமற்போக, சிவபெருமான் பால் பெருகும்படி அனுக்கிரஹித்த கேடிக் திரம். ஸ்வாமி-மூலநாதேஸ்வரர், தேவி-மேகலாம்பிகை, அல்லது மோகலாம்பிகை, கொள்ளிட தீர்த்தம். சிவ பெருமான் பொன் இதயமாயப் புற்றிலிருந்து எழுந்தருளிய ஸ்தலம்-திருஞான சம்பந்தர் பாடல் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/23&oldid=730413" இலிருந்து மீள்விக்கப்பட்டது