பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. பிட்சாண்டார் கோயில்:-இதற்கு சமய புரம் என்றும் பெயர். திருச்சிராப்பள்ளிக்கு 7 மைல், லால்குடி தாலுகா திருச்சிராப்பள்ளி ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். உத்தமர் கோயில், ஸ்வாமி பெயர் கல்வெட்டுகளில் திருக் கரம்பத்துறை மஹா தேவர் என்றிருக்கிறது. இங்கு மஹா விஷ்ணுவிற்கும், பிரம்மாவிற்கும் சங்கிதி கள் உண்டு ; தினம் மும்மூர்த்திகளுக்கும் பூஜை நடக் கிறது. இவ்விடம் பஞ்சப்பிரகார உற்சவம் விசேஷம். பிட்டா புரம் :-(பிஷ்டபுரம்) கோதாவரி ஜில்லா, சென்னே ராஜதானி,குக்குடேஸ்வரர் சிவாலயம். பாதகயை தீர்த்தம், இங்கு கயாசுரனைப் பரமசிவம் சம்ஹாரஞ் செய்த இடமாம். பிட்டான்பூர் :-பெங்கால்காகபூர் ரெயில்வேயிலுள்ள சல்பா எனும் ஊருக்கு 2 மைல்-சிவாலயம். பிடவூர் -தற்காலம் திருபபட்டுர் என்னும் பெய ருடையது. திருசசிராப்பள்ளி ஜில்லா, முசிறி தாலுகா, இதுதான் சங்க காலத்திய பிடவூர்; சிவாலயம் வைப்பு ஸ்தலங்களில் ஒன்று. பித்ரஹல்லிக் கோட்டை -பம்பாய் ராஜதானி துங்க பத்ரைக் கரையிலுள்ளது. சிவாலயம் பாழாயிருக்கிறது. பஞ்சமுக லிங்கம். பிரங்கி புரம் ;-வினுகொண்டா தாலுகா, கு ண் டு ர். ஜில்லா, சென்னை ராஜதானி சிவாலயம். ஸ்வாமி.வீரபத் ரேஸ்வர். பிரம்பியம் :-தஞ்சாவூர் ஜில்லா, சென்னை ராஜதானி, கும்பகோணத்திற்கு 5 மைல் வடமேற்கு-சிவாலயம். பிரம்மதேசம் -சென்னை ராஜதானி, சிவாலயம். ஸ்வாமி-சந்திரமெளளிஸ்வார். கிருஷ்ண சாஸ்திரியார் இது பல்லவ கட்டடம் என்று கூறியுள்ளார்; துப்ரெயில் துரை பழைய சோழ கட்டடம் என்று கினைக்கிறர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/25&oldid=730415" இலிருந்து மீள்விக்கப்பட்டது