பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 குமாரசாமி கோயிலாக பிரசித்தி பெற்றது. ஆயினும், சிவபெரும்ரனும் தேவியாரும் கோயில் கொண்டிருக் கின்றனர். பிரான் மலை :-திருப்பத்தார் தாலுகா, ராமநாதபுரம் ஜில்லா, சென்னை ராஜதானி. கொடுராஜீஸ்வரர் கோயில்; விஸ்வநாதர் கோயில், சொக்கநாதர் கோயில். - பிருத்தாவனம் -வட இந்தியா (பிரபல விஷ்ணு கேஷத்திரம்) சிவாலயம். கோயில் பூரீ கிருஷ்ணன் காலத் திற்கு முந்தியதாகச் சொல்லப்படுகிறது, ஸ்வாமி.மஹா தேவர், தேவி-பார்வதி. (மிகவும் பழமையான கோயிலென காலஞ் சென்ற கே. ஆறுமுகப் பிள்ளே கூறுகிருரர்.) யமுனே தீர்த்தம். - - பில்சாட் :-வட இந்தியா, சிவாலயம், ஸ்வாமி.மஹா சேனர் கோயில்-415-ம் வருஷத்திற்கு முந்திய தென சிலர் கூறுகின்றனர். பிலாஸ்பூர் :-வட இந்தியா, மத்ய மாகாணம்; இங் குள்ள சிவாலயங்கள் :-(1) பிலாஸ்புரி ரங்கநாத் ஷிவ் சிவா லயம். (2) கரோட் கிராமம், சிவாலயம் ஸ்வாமி.லட்ச்மேஸ் வார்; சுமார் 1300 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. மத்திய மாகாணத்தில் இதுதான் சிறந்த கோயில், (3) பாலி கிராமம் சிவாலயம், ஜாஜல்ல தேவர்ால் கட்டப் பட்டது. அழகிய சில்பமுடையது. (4) பீதாம்பூர் கிராமம். மஹாதேவர் சிவாலயம். இங்கு பிரார்த்தனை செலுத்து வோர் ஒரு லட்சம் சிதைவு இல்லாத அரிசிகளைக் செலுத்து கின்றனர். (5) தென்பூர் பிர்தேஷ்வர் மஹாதேவர் சிவா லயம், பிள்ளையார் பட்டி:-சென்னை ராஜதானி, மதுரை ஜில்லா, சிவாலயம்; ஸ்வாமி-மருதீசர், தேவி-வாடாமுலை யம்மை. - - பிற்றமங்கலம் :-மைசூர் ராஜ்யம். முக்தி நாதேஸ்வரர் சிவாலயம், 11-ஆம் நூற்ருண்டில் கட்டப்பட்டது. 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/27&oldid=730417" இலிருந்து மீள்விக்கப்பட்டது