பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 புவனேஸ்வரம் :-வங்காள நாக்பூர் ரெயில் ஸ்டேஷன். வட இந்தியா - குர்தாஸ் ஸ்டேஷனிலிருந்து 11 மைல். பிரபல சிவஸ்தலம், இங்கு முற்காலத்தில் 7000 சிவாலயங்க ளிருந்தனவாம். தற்கால்ம் சுமார் 500 சிவாலயங்களுண்டு. (1) இவற்றுள் லிங்கராஜ் மஹாதேவர் ஆலயம் மிகவும் பெரியது; மிகச் சிறந்தது. கோபுரம் ஏழாம் நூற்ருண்டில் கட்டப்பட்டது. ஸ்வாமி பெயர் லிங்கராஜ் மஹாதேவர், புவ னேஸ்வரர்,தேவி-பார்வதி; பிந்து ச்ரோவுாத் தீர்த்தம்,மஹா நதி அருகிலுள்ளது. லிங்கத்தை பஞ்சமர்கள் மகம்மதியர் கள் தவிர மற்ற எல்லா ஹிந்துக்களும் தொட்டு பூஜை செய்யலாம். கோயில் வட ஆரிய சில்பமமைந்தது, மிகவும் அழகியது. ஒரிஸ்ஸாவையாண்ட யயாதிகேசரி எனும் அரசனுல் ஆரம்பிக்கப்பட்டு அவனது பேரகிைய அலபு கேசரி அல்லது லலாட் இந்திரகேசரியால் முடிக்கப்பட்டது. இங்குள்ள நாட்டிய மந்திரம் 11-ஆம் நூற்றண்டில் சாலின கேசரியின் ராணியால் கட்டப்பட்ட்து. விமானம் 180 அடி உயரம், சுயம்புலிங்கம் 8 அடி உயரம், பிராகாரம் 520 அடி x 465 அடி. பிராகாரத்தில் பகவதி, பார்வதி, ஆலயம். (2) இதற்கு மைல் துரத்தில் முக்தேஷ்வர் ஆலயம். இது 6-ஆம் துாற்றண்டில் கட்டப்பட்டது. அழகிய சில்பமமைந்தது. (3) பரசுராமர் ஆலயம். இது 2-ஆம் நூற்றண்டில் கட்டப்பட்டதென்பர். இதுதான். இங்குள்ள சிவாலயங்களுக் கெல்லாம் பழமையானது. ஆரிய் சில்பமமைந்தது. (4) பாஸ்கரேஸ்வரர் ஆலயம், புவனேஸ்வரர் ஆலயத்திற்கு வடகிழக்கிலுள்ளது. 6-ஆம் நூற்ருண்டில் கட்டப்பட்டது. லிங்கம் மிகவும் பெரியது. (5) அருகாமையிலுள்ள கெளரி குண்டம் எனும் ஏரிக் கண்யில் கேதாரேஸ்வரர் ஆலயமிருக்கிறது. மற்றுமுள்ள முக்கிய ஆலயங்கள் சித்தேஸ்வர ஆலயம்; வருணேஸ்வரர் கோயில; கபிலேஸ்வரர் கோயில், ராமேஸ்வர் கோயில்: பரமேஸ்வரர் கோயில், உத்தரேஸ்வரர் கோயில், சிசிரேஸ் வார் கோயில், மைத்ரேஸ்வரர் கோயில், மேகேஸ்வரர் கோயில், சுயம்புகேஸ்வரர் ஆலயம், கோடிதீர்த்தேஸ்வரர் ஆலயம், பிரம்மேஸ்வரர் ஆலயம் முதலியன; இங்கு பல சத்திரங்கள் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/34&oldid=730425" இலிருந்து மீள்விக்கப்பட்டது