பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கோயில் எனும் ஒரு சிவாலயமுண்டு. அன்றியும், இங் கருகிலுள்ள கங்கா கிருஷ்ண கட்டத்தில் ஒரு மஹாதேவர் சிவாலயமுளது. மத்ரா தாசில் :-ஐக்கிய மாகாணம். இங்கு ஆரிங் எனும் ஊரில் சிவாலயம் உண்டு. சுவாமி-பிமலேஷ்வர் மஹா தேவ், சிறிய கோயில். முத்திதரும் ஏழு கேஷத்திரங்களில் ஒன்று. இதற்கு ஆதியில் மதுரபுரி என்று பெயர் இருந் தது. இங்குள்ள மற்ற கோயில்கள்:-ராமேஷ்வர் கோயில், யமு ைநதிக்கரையில வங்காள கட்டத்திலுள்ளது; ஹாட கேஷ்வர் கோயில் கெளகாட்டில் உள்ளது; ரங்கேஷ்வர் மஹாதேவ் கோயில், ரங்கபூமியிலுள்ளது. இங்கு பல தர்மதத்திரங்கள் உண்டு. - - மதன பள்ளி -சென்னை ராஜதானி, கடப்பை ஜில்லா, சிவாலயம். மதுராந்தகம் :-சென்னை ராஜதானி, ரெயில் ஸ்டேஷன் மதுராந்தகன் எனும் சோழ அரசல்ை கட்டப்பட்டிருக்க லாம். இவன் சுமார் 950 கி. பி. யில் ஆண்டவன். சுவாமி. அருளாளேஸ்வரர், வெண்காட்டதீஸ்வரர்(?) இங்கு சத்திர மதுரை :-இதற்கு ஆலவாய் என்பது தேவாரப் பெயர். சம்ஸ்கிருதத்தில் ஹாலாஸ்யம் என்று பெயர். கடம்ப வனம் என்பது இதன் பூர்வீகப் பெயர்; கூடல், நான் மாடக்கூடல், சமட்டி விச்சாபுரம், துவாத சாந்த ஸ்தலம் என்றும் பெயர்களுண்டு. வைகையாற்றின் கரையி லுள்ளது. பண்டைக் காலத்தில் பாண்டிய ராஜதானியா யிருந்தது. தனஞ் செயன் எனும் ஓர் வணிகன் இங்கிருந்த கடம்பவனத்தில் ஓர் இரவு இந்திரன் லிங்கபூஜை செய் ததைக் கண்டு அரசனுக்கு அறிவிக்க, அரசன் கடம்ப வனத்தைக் களைந்து, ஒர் பட்டணத்தை யுண்டு பண்ண வெண்ணி பரமசிவத்தை வேண்ட, அவர் அனுப்பிய ஒர் பாம்பு நகரின் எல்லையைச் சுற்றி வட்டமாகக் கர்ட்டிய படியால், இவ்வூர் பூர்வகாலத்தில் வட்டமாக அமைக்கப் பட்டது. இக் காரணம்பற்றியே இதற்கு ஆலவாய் என்று பெயர் வந்தது. ஊரில் வட்டமாயிருக்கும் வீதிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/57&oldid=730450" இலிருந்து மீள்விக்கப்பட்டது