பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 தெற்கில் உள்ளது. தேவாரப் பதிகங்களில் மயிலாப்பு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. திருஞானசம்பந்தர் அங்கம் பூம்பாவையாக்கிய கேடித்திரம். கோயிலின் மேற்கு பிராகாரத்தில் இதற்கு ஒரு சிறு கோயில் உண்டு. ஸ்வாமி-கபாலீஸ்வரர், தேவி-க்ற்பகாம்பாள், பு ன் னை விருட்சம், கபாலி தீர்த்தம் (சித்திரை குளம்) ராம தீர்த்தம், முதலியன. பார்வதி தேவியார் மயில் உருவில் சிவபெரு மானப் பூசித்த கேஷத்திரம். வடக்கு பிராகாரத்தில் இதற்கு ஒரு கோயில் கட்டப்பட்டிருக்கிறது. திருவள்ளு வர் வாழ்ந்த ஸ்தலம். ஸ்வாமி சந்நிதி மேற்கு பார்த்தது. தேவி சங்கிதி கிழக்கு பார்த்தது, தற்காலக் கோயில் சுமார் 300 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாம். இதில் ஒரு கல்வெட்டும் இல்லாததது கவனிக்கத் தக்கது. பழைய கோயில் சமுத்திக் கரையோரம் இருந்தீது, போர்த்து கேயரால் இடிக்கப்பட்ட தென்று எண்ணுவதற்கிடமுண்டு. வியைகர் பெயர்-கூத்தாடு விநாயகர், சுப்பிரமணியர் பெயர் சிங்கார வேலவர். பிரம்மோற்சவம் பங்குனிமாசம். 8-ஆம் நாள் திருஞான சம்பந்தர் அங்கம் பூம்பாவை யாக்கிய ஐதிகம் நடந்தேறி வருகிறது, அறுபத்து மூவர் உற்சவம் விசேஷம். 3-ம் நாள் அதிகாரநந்தி சேவை காலை 6 மணிக்கு, 5-ம் நாள் விருஷமோற்சவம் 9-ம் நாள் பிட்சாடனர் திருக்கோலம், இந்த உற்சவங்கள் விசேஷம், கோபுரம் புதிதாய்க் கட்டப்பட்டது சுமார் 40 வருடங் களுக்குமுன்-125 அடி உயரம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. மயிலாப்பூரிலுள்ள மற்ற சிவாலயங்கள்:(1) வெள்ளீஸ்வரர் கோயில் தெற்கு மாடவீதியிலுள்ளது. சுக்கிரன் பூசித்தது. பிரம்மோற்சவம் சித்திரை மாசம் ஸ்வாமி.வெள்ளீஸ்வரர், தேவி-காமாட்சியம்மன். (2) மல்லி கேஸ்வரர் கோயில், தேவி-மரகதவல்லி. (8) விருபாட் சீஸ்வரர் கோயில், தேவி-விசாலாட்சி. (4) காரணிஸ்வரர் கோயில். (5) பிரம்மபுரீஸ்வரர் கோயில். (6) தீர்த்த கபர்லீஸ்வரா கோயில்,அகஸ்தியர்பூசித்த ஸ்தலம். என்பர். (i) ராமலிங்கேஸ்வரர் கோயில் ரீ ராமர் பூசித்த ஸ்தலம். (8) மீளேச்சுரர் கோயில் வேதம் பூசித்த ஸ்தலம். (9) வாலீஸ்வரர் கோயில், வாலி பூசித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/65&oldid=730459" இலிருந்து மீள்விக்கப்பட்டது