பக்கம்:Siva Shrines In India and Beyond Part-4.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பழமையான ஆலயம், கல்வெட்டுகள் நிறைந்திருக்கிறது. மூவர் பாடல் பெற்ற கேஷ்த்திரம். மழலாடி -உடையார் பாளையம் காலுகா, திருச்சிராப் பள்ளி ஜில்லா, சென்னை ராஜதானி, வைத்யநாதர் கோயில். மழிசை :-திருமழிசை என வழங்கப்படுகிறது. (பிர பல விஷ்ணு கேடித்திரம், திரு +மயி + சேய், திருமழிசை யாயதென்பர்.) பூவிருந்தவல்லிக்கு 3 மைல். செங்கல் பட்டு ஜில்லா, சென்னை ராஜதானி, சிவாலயம். தற்காலம் ஸ்வாமி பெயர் ஒட்டாண்டி என்பர். தேவி-சீதள நாயகி, பழைய கல்வெட்டுகளில் ஸ்வாமி பெயர் அகஸ்தியேஸ்வரர் என்றிருக்கிறது. அருகிலிருக்கும் வைணவக் கோயிலார் தற்காலப் பெயரைக் கொடுத்தனர் என்பர். கோயில் பழைய சோழ கட்டடம். 1055-ம் ஆண்டில் ஆண்ட முதல் குலோத்துங்க சோழன் காலத்திய கல்வெட்டு ஒன்று உளது. பண்டிட் நடேச சாஸ்திரியார் இக் கோயில் 11ம் நாற்ருண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டுமென்று கூறுகிருர். கர்ப்பக்கிரஹம் கஜப்பிருஷ்ட ஆகிருதி : காஞ்சி ஜ்வரஹரேஸ்வரர் கோயிலைப் போன்றது. மளவள்ளி:-மைசூர் ராஜ்யம், ஷிகார்பூர் காலுகா, விமோகா ஜில்லா, சிவாலயம். ஸ்வாமி பெயர் கள்ளேஸ் வரர், பூர்வகாலத்தில் ஸ்வாமி பெயர் மள்ளபள்ளிதேவர் என்றிருந்தது. இங்கு ரமலிங்க ஸ்வாமி கோயில் என்று மற்ருெரு சிவாலயமுண்டு. மற்றும் அமிர்தேஸ்வர ஸ்வாமி கோயில்-கிலமாயிருக்கிறது. மறவ மதுரை:-புதுக்கோட்டை சமஸ்தானம், திரு மெய்யம் தாலுகா, சிவாலயம். மறியூர் :-சென்னை ராஜதானி, ராம்நாட் ஜில்லா, ராம காத புரத்திற்கு 26 மைல். மிகவும் பழைய சிவாலயம். ஸ்வாமி.பூவேந்திநாதர்; கோயில் மணலால் மூடப்பட்டிருக் ததை ராயர் அப்பாஜி காலத்தில் வெளிப்படுத்தினர். அச் சமயம் ஸ்வாமியின்மீது சாற்றியிருந்த புஷ்பங்கள் வாடாம லிருந்தபடியால், ஸ்வாமிக்கு அப்பெயர் வந்ததென்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Shrines_In_India_and_Beyond_Part-4.pdf/68&oldid=730462" இலிருந்து மீள்விக்கப்பட்டது