பக்கம்:Siva Temple Architecture etc..pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ஆதி சிவாலயங்களில் சுப்பிரமண்ய ஸ்வாமிக்குப் பிரத்யேகமாக சந்நிதி ஏற்பட்டதும் பிறகுதான் என்று கூற வேண்டும். முன்பு கூறியபடி பழய பல்லவ சிவாலயங்களில் சொமாஸ்கந்த விக்ரஹத்தில் நடுவில் பாலசுப்பிர்மணியர் சிறு உருவத்தில் இருக்கிறார் ; இதைத் தவிர்த்து சுப்பிரமணியருக்கு பிரத்யேக கோயில் கிடையாது ; மேற்கூறிய பழய பல்லவ சிவாலயங்களை உற்று நோக்குக. பதினோராம் நூற்றாண்டின் முன் பகுதியில் கட்டப்பட்ட தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோயிலிலும், ஆதியில் சுப்பிரமணியருக்கு ஆலயம் கட்டப்படவில்லை. தற்காலமிருக்கும் சுப்பிரமணியர் ஆலயத்தைப்பற்றி, பெர்கூசன்துரை அடியிற் கண்டவாறு எழுதுகிறார், "இக்கோயில் தற்காலத்தில், தென் இந்தியாவிலுள்ள ஆலயங்களில் மிகவும் அழகிய சில்பமமைத்ததெனக் கூறலாம் ; இது பெரிய கோயில் (பிரஹதீஸ்வரர் கோயில்) கட்டப்பட்ட பிறகு இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கப்பால் கட்டப்பட்டது. முற்றிலும் புதுப்பிக்கப்பட்டவை நீங்கலாக, பூர்வீக சிவாலயங்களை ஆராய்ந்து பார்த்தால், அவைகளில் ஏறக்குறைய எல்லாவற்றிலும் சுப்பிரமணியருக்குப் பிரத்யேக சந்நிதி பிற் காலம்தான் கட்டப்பட்டதென்பது நன்கு விளங்கும்.

சிவாலயங்களில் விக்னேஸ்வரருக்கும் பிரத்யேக சிறு ஆலயம் கட்டப்பட்டதும் பிற்காலத்திய பழக்கமாம். ஆதி காலத்தில் அவ்வாறில்லையென்றே கூறலாம். தற்காலத்தில் பிள்ளையாருக்கு பெரிய ஸ்தலங்களில் நூற்க்கணக்கான சிறு கோயில்களைக் காணலாம்; ஆயினும் ஆதி காலத்தில் ஒரு விக்னேஸ்வர ஆலயமாவது கிடைக்காது. இச்சந்தர்ப்பத்தில், மஹாபலிபுரத்திலுள்ள தற்காலம் கணேசர் ரதம் என்று அழைக்கப்படும் கோயிலில் தற்காலம் ஒரு புதிய கணநாதரை வைத்திருக்கிறார்கள். இது ஆதியில் சிவாலயமாகத்தான் கட்டப்பட்டது. இதற்கு, அத்தாட்சி அங்கிருக்கும் கல்வெட்டேயாம். அதில் "இக் கோயில் ஏழாவது நூற்றாண்டில், அத்யாங்க காமரண ஜெயன் எனும் பல்லவ அரசனால் கட்டப்பட்ட சிவாலயம்" என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இதிலிருந்த பழய லிங்கமானது ஓர் ஐரோப்பியரால் இங்கிலாண்டுக்குக் கொண்டுபோகப் பட்டதென்றும் அறிகிறோம்; அதன்பின் காலியாயிருந்த இடத்தில் விநாயகரது சிலை அமைக்கப்பட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/18&oldid=1293872" இலிருந்து மீள்விக்கப்பட்டது