பக்கம்:Siva Temple Architecture etc..pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தீரணமுடையது; இது ஒரே பிராகார மடங்கியது; இதற்கு ஒரு சிறு கோபுரமும் உண்டு. இங்குள்ள அசலேஸ்வரர் கோயில்தான் மிகவும் புராதனமானதென்று சிலர் எண்ணுகின்றனர். வெளி கோபுரங்களெல்லாம் விஜயநகரத்தரசர்கள் காலத்தில் கட்டப்பட்டவைகளாம்.

பெரிய காஞ்சீபுரம் ஏகாம்பரகாதர் கோயில்:-இது தேவார காலத்திற்கு முன்பாக இருந்திருக்கவேண்டும். ஆதியில், இது மரத்தாலாய கோயிலாயிருந்து பிறகு செங்கல்களாலும் சுண்ணாம்பினாலும் அமைக்கப்பட்ட ஆலயமாயிருந்திருக்கலாம். பிறகுதான் கருங்கல்லால் கட்டப்பட்டதாயிருக்கவேண்டும் என்பதற்கு சந்தேகமில்லை. ஆதியில் இருந்த கர்ப்பக்கிரஹம் பழய சோழ கட்டிடமாம். இது சுமார் 50 வருடங்களுக்கு முன் நாட்டுக்கோட்டை செட்டியார்களால் முற்றிலும் பிரிக்கப்பட்டு, புதிதாய்க் கட்டப்பட்டது. ஒரு சிவாலயத்திற்குரிய எல்லா அங்கங்களும் இருந்தபோதிலும், இவைகளெல்லாம் ஒரு ஒழுங்காயிராமல், கோணல் மாணலாக கட்டப்பட்டிருக்கிறதென டாக்டர் பெர்கூசன் கூறுகிறார். இப்படி நேரிட்டது. அப்போதைக்கப்போது பல புதிய கட்டிடங்களைச் சேர்த்துக் கொண்டு வந்தபடியால் இருக்கலாம். பெரிய கோபுரம் விஜயநகர சில்பம், கிருஷ்ணதேவராயர் காலத்தில் (1509 - 1530) கட்டப்பட்டது; இது தெற்குபார்த்தது; இக்கோயிலில் பல கோபுரங்கள் இருந்தும் இரண்டு கோபுரங்களாவது, ஒன்றுக்கொன்று நேராக இல்லை. 1000 கால் மண்டபம் என்று சொல்லப்படுவதில் 540 கால்கள்தானிருக்கின்றன. இம் மண்டபமும் விஜயநகர சில்பமமைந்ததே. கோயிலில் பெரிய பிராகாரத்திற்குள் மணற்கல்லாலாகிய (Sandstone) இரண்டு பூர்வீக கோயில்கள் இருந்தன. சுமார் 55 ஆண்டிற்குமுன்வரையில்; இவைகளில் ஒன்றாகிய மயானீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்பட்டது சில வருடங்களுக்கு முன் பிரிக்கப்பட்டு, கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. அவ்வாறு பிரிக்கப்படாது முன் ஸ்தியிலிருக்கும் மற்றொரு கோயில் ரிஷபேஸ்வரர் கோயிலாம். இதுவும் பழய மாயானேஸ்வரர் கோயிலும் 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவைகள். இவையிரண்டும் மேற்கு பார்த்த கோயில்கள். இங்குள்ள அகத்தீஸ்வரர் மண்டபமும், சபாநாதர் மண்டபமும் பழய சோழகட்டிடங்கள். இங்குள்ள கலியாண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/34&oldid=1293957" இலிருந்து மீள்விக்கப்பட்டது