பக்கம்:Siva Temple Architecture etc..pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

பிராகாரத்தில் கட்டப்பட்டிருந்த மேற்கட்டுடன் கூடிய அழகிய கட்டிடமானது பெரும்பாலும் இடிக்கப்பட்டு, அதிலிருந்த கற்கள் முதலியவைகள் எல்லாம் 1836௵ காவேரியில் கீழ் அணைகட்டுவதற்காக, உபயோகிக்கப்பட்டது; நல்ல காலமாக லார்ட்கர்ஜான் (Lord Curzon) கவர்னர் ஜெனரலாயிருந்த போது அவர் பிறப்பித்த "பூர்வீக கட்டிடங்களை காக்கும் சட்டம்" உண்டான பிறகு, இப்படிப்பட்ட கெடுதிகள் சிவாலயங்களுக்கு ஏற்படவில்லை என்று கூறலாம்.

சில சிவாலயங்கள் கோட்டைகளாக
உபயோகிக்கப்பட்டன

விஜய நகரக்தரசர்கள் காலம் முதல், சில சிவாலயங்கள், யுத்த காலத்திலும் ஆபத்காலத்திலும் கோட்டைகளாக உபயோகிக்கப்பட்டு வந்தன என்பதற்குச் சந்தேகமில்லை. இதற்காகவே அவர்கள் பெரிய கோயில்களிலெல்லாம் உயர்ந்த மதிற்சவர்கள் எழுப்பினார்கள்; அன்றியும் அவர்கள் கட்டிய பெரிய கோபுரங்கள், உச்சமான நிலையிலிருந்து எதிரிகள் தூரத்தில் வருவதை கவனிக்கவே இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சி யாளர்களால் ஒப்புக் கொள்ளப்படுகிறது. பெரிய சிவாலயங்களில் வெளி கோபுர வாயில்களின் கதவுகளில் கூர்மையான பெரிய இரும்பு ஆணிகள் அமைத்ததும், எதிரிகள் யானை முதலிய படைகளைக்கொண்டு இவைகளை எளிதில் பெயர்க்க முடியா வண்ணம் இருக்கவேண்டு மென்னும் எண்ணத்துடனேயாம். பல ஊரிலிள்ள ஜனங்களில் பெரும்பாலர், மகம்மதியர் முதலிய பகைவர் படை யெடுத்துவந்த போது, கோயில்களுக்குள் புகுந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்த்தார்கள் என்பது சரித்திரமறிந்த விஷயம்; ஐதர்கலாபனை காலத்தில் இது பன்முறை நடந்திருக்கிறது. ஐதர் காஞ்சிபுரத்து பெரிய சிவாலயத்தை பன்முறை தாக்கியதாகத் தெரிகிறது; அவனது பீரங்கி குண்டுகளினால் உண்டாய வடுக்களை சிவாலயத்தில் சில இடங்களில் இன்னும் காணலாம். தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோயிலை பிரஞ்சுக்காரர்கள் கோட்டையாக உபயோகித்ததாக நாம் சரித்திர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Siva_Temple_Architecture_etc..pdf/45&oldid=1294665" இலிருந்து மீள்விக்கப்பட்டது