பக்கம்:Tamil varalaru.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி ழ ர் ெகா ள் ைக க ள் 111 கூறுதல் போன்றுள்ள கருத்தொற்றுமை கண்டு இன்புறத் தகும். இன்னும் களவொழுக்கம் அச்சமும் வருத்தமும் உண்டாக்கு தலும் காண வதுவையே இவையின்றி இனிது முயங்கற்கொத் துப் பயனளிப்பதும் சான்ருேர் பாடல்களிற் பெருகக் காணலாம், ' வியினிது கமழுங் துறைவனே நீயினிது முடங்குமதி காத லோயே' (ஐங்கு று நூறு. 148) என் புழிப் பழைய வுரையாளர், ' களவொழுக்கத்தின் விகள வறியாது அஞ்சிய வருத்த நீங்க வதுவை கரண வகையான் முடித்த பின்பு தலைமகளைப் பள்ளியிடத்துய்க்குக் தோழி சொல் லியது ' என்றெழுதிய நயமான துறை கண்டு இவ்வுண்மை யுணர்க. இதன் கண் இனிது முயங்குதி என்ற தல்ை கள வொழுக்கத்து இனிது முயங்கியதாகாமை காணப்படும். இனி அகத்திணை நூல்களிற் களவொழுக்கத்து மெய்யுறு புணர்ச்சியுங் கூறியிருத்தலேக் கண்ட கல்லுரையாளர் பலரும் இவ்வகப் பொருளே உலகியலுடன் நாடகவியலுமாக்கிச் செல்லு தற்கண்ணே கருத்துடைய ராதல் அவரவர் உரைகளிற் கண்டு கொள்ளலாம். இதற்ை றமிழர் உலகியற்கொத்த உயர்ந்த மணவொழுக் கம், உள்ளப் புணர்ச்சியுற்றபின் கரணத்தொடு வரைந்து வாழ் வதே என்று தெளியலாம். புவிபுகழ் புலமை அவிகயருைம் உள்ள ல்லதுடம் புறப்படாத் தமிழியல் வழக்கம்' என (யாப் பருங்கல விருத்தியுரையுள் ஒழிபியல்) . உலகறியக் கூறியதை முன்னரே எடுத்துக் காட்டியுள்ளேம், களவிற் புணர்ர்த தமிழியல் வழக்கத்தினும், களவிற் புணராது உள்ளம் மட்டும் புணர்ந்த தமிழியல் வழக்கம் உயர்ந்ததாதல் தெளிக. இனிப் பரிபாடலுள்ளே, குன்றம் பூதனர், காதற் காமம் காமத்துச் சிறந்தது. விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி' (9, 14-15)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/119&oldid=731269" இலிருந்து மீள்விக்கப்பட்டது