பக்கம்:Tamil varalaru.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தமிழ் வரலாறு தமிழ் என்னுஞ்சொல் இனிமைப் பொருளில் வருதலைத் :தமிழ் தழிஇய சாயலவர் (சீவக. 2036) எனத்திருத்தக்க தேவ ரும் தமிழ்ப் பாட்டிசைக்குங் தாமரையே” (இராமா. பம்பைப் 29) எனக் கம்பகாடரும் கூறுவது கொண்டு எளிதிற்றெளியலா கும். சிந்தாமணியில் திருத்தக்க தேவர் சாயல் (மென்மை) தமிழ் தழீஇயதாகக் கூறினர். அங்கே பெண்பாலார் உடம்பின் மென்மை தமிழ்மொழி தழீஇயதாகக் கூறுதல் இயலாது. சாயல், கண்டார்க்கு இனிமை செய்தலான் இ னி ைம தழிஇ சாய லென்று நச்சிஞர்க்கினியர் அங்கே உரைத்தார். இவ்வாறே இராமாயணத்திற் கம்பங்ாடர், வண்டுகள் தாமரையிற் றமிழ்ப் பாட்டிசைப்பது கூறினர். வண்டுகள் தமிழ் மொழியாலாகிய பாட்டை இசைப்பதாகக் கூறுதல் இயலாது. கேட்டார்க்கு இனிமை செய்தலால் இனிமையுடைய பாட்டை வ ண் டு க ள் இசைப்பனவாகக் கூறுவதே பொருந்துவதாகும். இவ்வீரிடங் களிலும் கண்ணுக்கினிமையும் செவிக்கினிமையும் தமிழ் மொழி யினல் வழங்கப்பட்டவாறு காணலாம். பிங்கல நிகண்டுகாரர்:இனிமையு நீர்மையுந் தமிழெனலாகும்” எனக் கூறுதலால் இனிமையேயன்றி நீர்மையும் இத்தமிழ் என்னுஞ் சொற்குப் பொருளாதல் காணலாம். இதற்கேற்ப இனிமையையே இம் மொழிக்கு அடையாக வைத்து இன்றமிழ்" எனவழங்குதல் பலவிடங்களிலும் காணலாம். இன்றமிழியற்கையின்பம்' (சீவக. 2008) எனச் சிந்தா மணியினும் வந்தது. இவ்வாறு இச்சொற்குப் பொருள் கூறு மிடத்து, இதனைத் தாய்மொழியாகப் பெற்ற நன்மக்கள், தம் மொழியிலுள்ள பேரன்பினால், தம்மொழி தமக்குப் பயிற்சி வயத் தால் இனிமை தருவது கருதி, அப்பொருளை இச்சொல்லிற்கு வழங்கினரோ வெனப் பிறர் நினைத்தல் கூடும். தெலுங்கு மொழி யைத் தமக்குத் தாய்மொழியாகக் கொண்ட பலரும் ' தெலுகு கேனு (தெலுங்கு இனித்தலால் தேவைது) என்று சிறப்பித் தல்போல இ த னே யு ஞ் சிறப்பித்தபடியென்று கொள்ளலா மெனக் கூறலுமாகும். இவ்வாறு கினேத்துக்கொள்ளுதல் இம் மொழியைப் பொறுத்த மட்டில் பொருந்தாதென்று காட்டி இம் மொழிக்கு இனிமையென்னும் பொருளுண்மை தெரியச் சில கூறு -வேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/14&oldid=731292" இலிருந்து மீள்விக்கப்பட்டது