பக்கம்:Tamil varalaru.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 த மி ழ் வ ர லா று பெருந்தேவி ' எனப் பொருளுரைத்தார். குலமுதல்-குலப் பிறப்பு. இது பிறந்த குலச்சிறப்புணர்த்தியதாகும், கோப்பெருங் தேவி என்பது புக்ககுலச் சிறப்புணர்த்தியதாம். இக்கருத்தா னன்றே "ஞாயிற்றுச் சோழன் மகள் உலகாண்ட சேரலாதற்கு ஈன்றமைந்தன் செங்குட்டுவன் ' (வாழ்த்து) எனச் செங்குட்டு வன் தந்தை தாயார் சிறப்புத் தோன்ற அடிகள் கூறினரென்க. அவர் கூறியவாறு, உலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகளின் றமைந்தன்-செங்குட்டுவன் ' (வாழ் த்து) என்பதாம். - இச் சிலப்பதிகாரத்தும், பதிற்றுப்பத்துப் பதிகங்களில் சேர வேந்தர் பிறப்பு வரலாறு கூறிய பகுதிகளிலும், இளங்கோவடி களும் பதிற்றுப்பத்துத் தொகுத்த கல்லாசிரியரும் கூறிய பதிகச் சொற்ருெடர் வைப்பு முறை கல்லிசைப் புலவர் ஆண்ட தொன் மைத் தமிழ் நெறியேயாகும். இவ்வுண்மையைச் சேரன் செங் குட்டுவற்குக் கண்ணகி வரலாறு கூறியவரும் அச்சேரவேந்த ளுேடும் அவன் திருத்தம்பியா ரிளங்கோவடிகளோடும் பல்காற் பயின்று வதிந்தவரும் அடிகள் பாடிய சிலப்பதிகாரத்தைக்கேட் டவரும் தமிழ் முழுதுணர்ந்தவருமாகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனர் தாம் பாடிய மணிமேகலை நூலுள், தவத்திறம் பூண்டு தருமங் கேட்ட காதைக்கண், ' வென் வேற் கிள்ளிக்கு நாகநா டாள்வோன் தன்மகள் பீலி வளை தான் பயந்த புனிற்றிளங் குழவி ” (மணி. 39. 3-5) எனக்கூறிய தொடர் நோக்கி இனிது தெளிக. இத்தொடர் முறைக்கும் இளங்கோவடிகள் வாழ்த்துக்காதை உரைப்பாட்டு மடையிற் சேரலாதற்கு ஞாயிற்றுச் சோழன் மகளின் றமைக்தன் எனச் செங்குட்டுவன். பிறப்புணர்த்திய தொடர் முறைக்கும் எவ்வித வேற்றுமையுமில்லாமை கண் கூடாகக் கண்டு தெளிக. இம்மணிமேகலைத் தொடரை மட்டுங்கொண்டு வென்வேற்கிள் ளியின் பொருட்டு காகநாடாள்வோன் றன்னுடைய மனைவி (மகள்) தான் பெற்ற புனிறு தீராத இளமையுடைய மருகக் குழவி ' என ஒருவர் பொருள் கூறின் அது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/158&oldid=731312" இலிருந்து மீள்விக்கப்பட்டது