பக்கம்:Tamil varalaru.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 த மி ழ் வர லா று கொள்க. ஈண்டு அவன் என்றது இமயவரம்பன் நெடுஞ்சேர லாதனே. அவனே ஈன்ற தாய் என்றது உதியஞ்சேரல் மனைவி யாகிய வெளியன் வேண்மானல்லினியை , இதனே, உதியஞ் சோற்கு, வெளியன் வேண்மா ணல்லினி யீன்ற மகன், இமயவரம் பன்னெடுஞ் சேரலாதன் எனப் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்துப் பதிகத்துட் கூறலானறியலாம் ' கல்லினி உதியஞ்சோற் கின்ற மகன் கெடுஞ்சேரலாதன் என்றே நேராக வியைந்து பொருள் சிறத்தல் காண்க. இதன் கண் உதியஞ் சேர ற்குமகனக உதித்தலான் ஆதன் சேரலாதன் எனப்பட்டான் என்பது ஈன்ற மகன் சேரலாதன் ' எனவருத லானறியலாம். இதனைச் செங்குட்டுவன் மகன் குட்டுவன் சேர ல் ” என்பது போலக் கொள்க. இத் தொடர் முறையே பழந் தமிழ் நெறிமுறை யென்பது முன்னரே பல மேற்கோள் கள் காட்டி விளக்கினேன். பிறர் கூறுமாறு வெளியனும் அவன் மனைவி கல்லினியும் சன்ற மகன் சேரலாதன் என்ருல் இவ்வரசன் தந்தையுந் தாயும் ஒரு சிறப்பு மில்லாத பெயர் மாத்திரையாய்க் கூறப்பட்டவராதல் தெளிந்துகொள்க. இங் வனமல்லாது வெளியன் வேண்மாஅளாகிய கல்லினி, " மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி இன்னிசை முரசினுதியஞ் சேர ற்கு ஈன்ற மகன் ' (2-ஆம் பத்துப் பதிகம்) என்ருல் தாய் வெளியன்குடியிற்ருேன்றிய வேண்மகள் எனவும், இவன் தந்தை முடியுடைப் பேரரசன் எனவும், இனிது கொள் ளக் கிடந்து சேரர் நூல் வரலாற்ருெடு பொருந்துவது காண்க. அன்றியும் பதிற்றுப் பத்துப் பதிகங்கள் பலவற்றில் அரசன் தாயைத் தேவியென்றே ஒழிதலும் சிலவற்றில் வெளியன் வேண்மாணல் லினி, சோழன் மணக்கிள்ளி, மையூர் கிழான், வேண்மாளந் துவஞ்செள்ளை எனப் பிறந்த குடிப் * பெயரிட்டுக் கூறுதலுங் கண்டுகொள்க. அரசிக்குப் பிறந்த அரசியென்று கல்லிசைப் புலவர் பாடாதிரார் என்க. இத்தாயரெல்லாம் சேரர் குடியினல்லாது பிறர் குடியினிற் பிறந்து இச்சேரர் ' 1. குடியிற் புக்கமகளிரேயாதல் ஏழாம்பத்துப் பதிகத்திற் பொ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/190&oldid=731348" இலிருந்து மீள்விக்கப்பட்டது