பக்கம்:Tamil varalaru.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த ா ய க் ெகா ள் ைக 189 பிற்காலத்துக் கடன்மலைகாட்டிற் குடியேறிய ஒருதிறத்தார் சொண்ட மருமக்கட்டாய முறையைக் கொங்குமுதல் மேல் கடலளவும் ஆண்ட பண்டைத் தமிழ்ச் சேரர்க்குச் சொல்லப் புகு மிடத்து உண்டாமிடர்ப்பாடுகள் மிகப்பலவாகுமென்க. இம்மரு மக்கட்டாய முறையாற் குடியேறியது தொட்டு இக்கடன் மலே நாடு நாளிசேரம் ' என வழக்குப் பெற்றதாகும். இவ்வுண் மையைக் கன்னடசாசனம் பலவற்றுள்ளும் கன்னட தேயத்தெற் கெல்லே கூறுமிடங்களில் கொங்குசேர ம், ஆனைமலை காரி சோம் என்று வருதலானறிந்து கொள்க. தமிழிற் சேரலர் என் பதே கேரளர் என மரீஇயிற்றென்பது அறிவாளர் துணிந்தது. சேரல் சேரலர் பெண்பாற்பெயராகாமை நன்குணர்ந்துகொள்க. கேரள புத்திரர் என்ற வழக்கும் நோக்கிக்கொள்க. இச்சோ குலத்தவர் பெயரில் அக்குடி குறித்த பெண் பெயரே நால் வழக்கி வில்லாமை நோக்கிக்கொள்க. சேரல், சேரன், சோலன் மாந்தரன், பொறையன், கோதை, பூழியன், குட்டுவன், கொங் கன், குடக்கோ, குடநாடன் என்பன முதலாகப் பல பெயர்கள் ஆண்பாலிலே வழங்குதல் தமிழ் கற்ருர் நன்கறிவர். இப்ப்ெயர் கட்குப் பெண்பாற் பெயர் வழக்கின்மை நால்களிற் கண்டுணர்க. ஈண்டுக் கோதை ஆண்பாலேயென்பது, கண்கடனுட குெண் பூங்கோதை ' (பத்துப்பாட்டு. மதுரை. 524). எனவும்,

குட்டுவன் கோதை எனவும்,. வாய்வாட் கோதை ’’ (சிலப். 25, 3) எனவும் வருவன கண்டுதெளிக. அரசுரிமை அக்குடிப் பிறந்த மகளிற்கு உளதாயின் அம்மகளர சிக் கேற்றதொரு பெயர் அக் குடியில் வழங்காதிராது என்று துணிக. இவற்ருற் சேரர்குடி யிற் றந்தையுரிமை மகற்குறுவதாதல் நன்கறியலாம்.பிறமொழி யிலுங் காணப்படுதல் சண்டைக்கியையக் கொள்க. இனிச் சிலப்பதிகார நடுகற்காதைக் கண்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/197&oldid=731355" இலிருந்து மீள்விக்கப்பட்டது