பக்கம்:Tamil varalaru.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 த மி ழ் வர ல ம என்று தாம் எழுதியுள்ள குறிப்பிற் கூறு இன்ருர் சங்கத்து எட்டுத் தொகையுள் ஒன்ருகிய பரிபாடலிலும், பொதியின் முனிவன் புரைவரைக் கீறி " (11-11) என வந்தது. ஈண்டு அகத்தியமீனப் பொதியின் முனிவன் எனக்கூறுதல்காணலாம். வான்மீகர் கிஷ்கிந்தாகாண்டக்கூற்றும் பிற்காலப் பெரு நூல்வழக்கும் முற்காலச் சங்க நால் வழக்கும் ஒத்தலால் அகத்தியருக்குப்பொதியிலே இருப்பிடமாகப்பொய்யே கற்பித்தனரென்றல் சிறிதும் பொருந்தாமையுணர்க. வெண்பா மால்ப் பாயிரத்தில், தென் மலை யிருந்த சீர்சான் முனிவரன் ' என வந்தது. மலயத் தருந்தவன் ” என்பது காரிகை. இவை யெல்லாம் மாதவ முனிவ்ன் மலை என்ற சிலப்பதிகாரத்துடன் இயைதல் காண்க. இவற்ருல், தமிழர் கூறும் வரலாறெல்லாம் பொதியிற்கண்ணுள்ள அகத்தியரைக் குறித்தனவென்றுதெளிய லாகும். வீரசோழிய நூல் செய்த புத்தமித்திரளுர், ஆயுங் குணத்தவ லோகிதன் பக்க லகத்தியன்கேட் டேயும் புவனிக் கியம்பிய தண்டமி நீங்குரைக்க ” (வீரசோ. பாயி. 3) என்பதளுல் அகத்தியர் பெளத்த மதத்து அவலோகேச்வாரிட துத் தமிழ் கேட்டறிந்தனரென்பர். அவலோகிதர் தமிழறிக்க வர் என்பதற்குரிய ஆதாரம் இதுவேயாகும். போதலகிரியில் அவலோகிதர் தம் பத்தினியாகிய தாரையுடன் உள்ளனர் என் பது பெளத்த நூற் கொள்கையாம். தாராஸாக் தத்தில் 'போத லகிரி நிவாஸிங் என்று அவன் துதிக்கப்பட்டவாறு அவர் காட் டுவர். ஆயினும் அசோக சக்கரவர்த்தி காலம் வரையில் அகா வது கிறிஸ்து பிறத்தற்கு முன்னர் 374 ஆண்டுவரையில் தமிழ் வேந்தருள்ள தென்பக்கத்துப் பெளத்தமதக் கொள்கைகள் புக்கன அல்ல என்பது அவ்வசோக சாசனத்தால் (கெர்கார்க் கல்வெட்டு) அறியக் கிடத்தலான் சீராமமூர்த்தி காலத்துள்ள வைதிகரான அகத்தியர் வரலாற்ருெடு அஃதியையாமை தெளிய லாம். வான்மீகம் ஆர்ணிய காண்டம் 18-ஆம் சருக்கத்து 16 முதல் 21 வரை புள்ள சுலோகங்களில் 'அவன் (இலக்குமணன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/202&oldid=731361" இலிருந்து மீள்விக்கப்பட்டது