பக்கம்:Tamil varalaru.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தமிழ் வ ர லா று இதற்கு இயல்பாகக் காணப்படும் நெடிய பழமையுளதாக கினேப் பதற்கும் இடமில்லையாகும். இம்மொழி நால்களும் அவைகளின் கருத்துக்களும், அக்கருத்துக்களை வளர்த்த நாகரிகங்களும் ஒருவர் உள்ளவாறு ஆராயின் இம்மொழி மிகப்பழையதாகத் தோன்றுமல்லது, இக்காலத்து வளர்ந்துள்ள புதுமொழிகள் போல்வதன்றென்பது புலகுைம். நெடுங்காலமான தனிமொழி யொன்று, தான் தனிமொழியாய் கின்ற நிலையிலே கெடுங்காலஞ் சென்றபின், பற்பல தேயத்தவர் கலப்பால் பிறமொழிகளையுக் தன்னுட்கொண்டு கலந்துவளர்வதியல்பேயாயினும், அம்மொழிக் குத் தனிகிலேயேயில்லாது கலந்துதிரிந்த கிலேயே முதற்ருெட்டு உள்ளதென்பது சிறிதும் பொருந்தாது. இத்தமிழில் இவை யெல்லாம் நன்குணர்ந்த இலக்கண நல்லாசிரியர்கள் தமிழின் பழைய நிலையையும் தொன்னுரலுடைமையையும் ஆராய்ந்து: இங்காட்டு இயற்சொல் திரிசொல் இவையென்று சிறப்பித்துக் காட்டிப் பிறசொற்கள் இதன்கட் புகுதலை உடன்பட்டு, வட சொல், திசைச் சொற்கள் புகுதற்கும் விதி வகுத்தனர். இத ல்ை தமிழ்மொழிக்குக் கலப்பற்றுத் தனி கின்ற இயற்சொல் கில முன்பே யுண்டென்பதும், அது பல்வகையானுந் தன்னே டொத்த ஆரியமாகிய வடதிசைச் சொல்லையும், பிற திசைகளில் வழங்கிய பழஞ்சொற்களையும் தன்னிடங்கொண்டு வளர்ந்த தென்பதும், இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலன் றனைத்தே செய்யுளிட்டச்சொல்லே " (தொல். சொல். எச்ச, 1.) எனவும், . "மரபே தானும், காற்சொல்லியலான் யாப்புவழிப் பட்டன.” (தொல், செய். 80) எனவுக் தொல்காப்பியளுர் கூறுதல்கொண்டு துணியலாம். இச்சூத்திரங்களிற் கூறப்பட்ட திசைச்சொற்கள் வழங்கும் நாடு கள் தமிழ் காட்டிற்கு வரையறைகூறிய வடவேங்கடம், தென் குமரி, குணகுடல், குடக்டல் என்னும் இக்கான்கெல்லைக்கு அகத்தனவேயாகாது புறத்தனவும் நெடுந்து ரத்தனவுமா மென் பது தமிழ் நூலாசிரியர் உரையாசிரியர்கட்கு உடன்பாடாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/22&oldid=731380" இலிருந்து மீள்விக்கப்பட்டது