பக்கம்:Tamil varalaru.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 த மி ழ் வ ர லா ம இப்பாடல் பாடிய முரஞ்சியூர் முடிநாகர்ாயர் என்பவர் தலைச்சங்கத்திருந்தவர் என்பது இறையனர் களவியலுரை காரர் கூறியது. அவ்வுர்ைகாரர், தலைச்சங்கத்திருந்தார் அகத் தியனரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்ற மெறிந்த முருகவேளும், முரஞ்சியூர் முடிகாகராயரும், நிதியின் கிழவனுமென இத்தொடக்கத்தார் ' என்றனர். இதனேயே உடன்பட்டு அடியார்க்கு கல்லாரும் அவ்வாறு கூறிஞர். (சிலப். 8) இத் தலைச்சங்க காலம் முதலுாழி யிறுதியென்பது அடியார்க்கு நல்லார் கருத்து. கச்சினர்க்கினியர் ஆதி பூழியின் அந்தத்தே இந்நூல் (தொல்காப்பியம்) செய்யப்பட்டது என்று கூறுதலான் தலைச்சங்கம் இன்னுஞ் சிறிது முந்திய காலத்தது என்பது அவர் கருத்தாகும். தலைச்சங்கத்தார் வரிசையிலிண்டுக் கூறப்பட்ட அகத்தியர், H. H. அமர முனிவன் அகத்தியன் ஆவர். ஆண்டுக் கூறப் பட்ட பலரும் தேவரேயாக இம்முடி நாகராயர் ஒருவரே மக்கள் வடிவினரென்பது அறியக் கிடப்பது. முரஞ்சியூர் என்று இவர் வதிந்த ஊர்ப்பெயரினேக் கூறுதலான் இதனுண்மை யுய்த்துணர லாகும். மற்றையோர்க்கு ஊர்கூறப்பெருமை யிண்டுகோக்கிக் கொள்க. ஈண்டுக்கூறிய வரலாறுகள் எங்ங்னமாயினும் இம் முரஞ்சியூர் முடிநாகராயர் என்பவர் மிகவும் இறப்ப முக்திய காலத்தவரென்பது மட்டிற் றுணி தற்கு வாயிலாகும். முடிகாக ராயர் என்பது முடியில் காகவடிவை அணிந்த அரசர் என்று பொருள்படும் என்று கருதுவாருண்டு, இற்றைக்கு மூவாயிரம் நாலாயிரம் வருடங்கட்கு முற்பட்ட பழைய எகிப்த ரசர் முடி களில் இக்காகவடிவு காணப்படுவது. இக்காட்டுப்பழைய பாரத காலத்து நாகர்களென்ற ஒருவகையினர் இருந்தனரென்று அங் நூ லா ற் றெரிவது. நாகர் தலைவன் மகளாகிய உலுாபியென்ப வ&ள அருச்சுனன் மணந்தனன் என்ப அங்காக கன்னியான உலுரபி பாண்டியகாட்டு மணலுார்ப் புரத்துப் பாண்டியன் மகளும் அருச்சுனனே முன்னே மணந்தவளுமாகிய சித்திராங் கதைக்குத் துணையாய்த் தோன்றி நிகழ்த்திய செய்திகள் அங் நூலுட்கண்டவை. (அசுவமேதபர்வம். அத்தியாயம் 81, 83, 88). இதல்ை தென்னட்டார்க்கும் நாகர்க்கும் பாண்டவர்க்கு முள்ள தொடர்பு நன்கறியப்படுவதாகும். வானரெழிலி '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/238&oldid=731400" இலிருந்து மீள்விக்கப்பட்டது