பக்கம்:Tamil varalaru.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 த மி ழ் வ ர லா று றலைமை தோன்றக்கூறி வேதங்கூறியமுறை பிற்றாது வைத்துச் செல்லுதலானும். முதலுங்கடையுமினேயுமாறு கிலனும்ருேம் ங்றுவலானும் இவர் மறையொடு பிறழா மாண்பினர் என்.று துணியலாகும். அந்தியந்தணரருங்கடனிறுக்கு முத்தி விளக் கினைக் கூறுதலானும், நால்வேதநெறி திரியாது என்று கருதுத லானும் இக்கருத்து வலியுறும். பெருஞ்சோற்றுதியனே ஞாயிறு தோன்றுங் குணகடற்கும் அஞ்ஞாயிறு மறையும் குடகடற்கு மிடைப்பட்ட கல்லவளகாட்டை யுடையணுகக் கூேறியுள்ளனர். இப்பெருஞ்சோற்றுதியன்சேரல்பாரதகாலத்து அத்தகையபெரு காடுடையளுகவிருந்த பெருமையை இப்பாட்டு எடுத்துப் புகழ்வ தாகும். இதில் இவனே வானவரம்பன் என்பதும் வானத்தை எல்லையாகக்கொண்ட பெருகாடுடைய னென்பதையே குறிக்கும். அரசர் இவரொடு சினை இ' என்றது. சினவாத இவரொடு சினந்து என்றவாறு. ஐவரிரைம்பதின்ம ரென்றது பஞ்சவரி னெளிமையும் நூற்றுவர் வலிமையுங் குறித்தது. கிலந்தலேக் கொண்டவென்றது அவர்சிறு மண்ணுங்கொடாது நாற்றுவர் கில முழுது முதற்கட் பற்றிக்கொண்டதனேக் குறித்தது. பொலம் பூந்தும்பை என்றது ஈரைம்பதின்மர் பொருதற்குத் தாமுஞ் குடிக்கன்னன் முதலிய பிறர்க்குஞ் சூட்டியது குறித்தது. தென் குட்டாரொப்ப வடகாட்டாரும் போர்க்குரிய அடையாளப் பூச் குடும் வழக்கம் நெடுங்கால முன்னரே யும் உண்டென்பது வான் மீ கிமுனிவர் பரத நம்பி கூற்றில் வைத்து, ' கம்யுத்த வீரர் மேகங்களைப்போன்ற கறுத்த கேடயங்களுடன், தென்னுட்டா ரைப்போலத் தலைக்கணியாகப் பூ க் க ளே ச் சூடுகின்றனர்." (அயோத். சர்க் 93.) எனக் கூறுதலான் கன்கறிந்ததொன்று. செல்வச் செருக்காற் பொன்வடிவிலமைத்துச் குடினரென்று ஈண்டுக் கருதப்படும். இவ்வழக்கங் தமிழ் காட்டிலுமுண்டு. * பொலம்பூந்தும்பை ' என்பது மதுரைக்காஞ்சி. ஈரைம்பதின் மர் என்றது ஐவர்க்குப்பதின்மர் வலியராகவும் அவரினும்ஈரைம் பதின்மராகவும் தெரியவைத்தவாறு. இவ்வழக்கினேயே இளங் கோவடிகளும் எடுத்தாளுதல் கர்ண்க. இவரொடு ஈரைம் பதின்மரும் பொருது என் புழி ஒடு ஐவர் உயர்த்தி தோன்ற் நின் றது. ஒருவினையொடுச்சொல்லுயர் பின்வழித்தே ' (தொல் சொல்.) என்பதிலக்கணம். ஐவர் பகைகொள்ளல வேண்டல ராகவும் நாற்றுவர் வலியப் பொருததனேக் குறித்தது. இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/246&oldid=731409" இலிருந்து மீள்விக்கப்பட்டது