பக்கம்:Tamil varalaru.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் செய்தானுற் பெயர்பெற்றன. அகத்தியம் தொல்காப்பியம் என இவை ' என இறையனர் களவியலுரைக் (கு. 1. உரை) கண் வருதலால் இந்நூலாசிரியர் தொல்காப்பியனுர் என்பது நன்கு தெளியப்படுவது. இவராசிரியரை மிகத்தெளிகேள்வி அகத்தியஞர் ' எனவும், இவரை, ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனர் ' (மயிலேகா தர்) எனவும் உரைகாரர் வழங்குவர். இவர் அகத்தியனர் மாளுக்கர் பன்னிருவருள் தலைமை கொண்டவர் என்பது புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரத்தானும் பேராசிரியர் மரபியலுரை யானும் அறியப்படுவது. தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி ' என்பதற்குப் பழைய காப்பியக் குடியில் உள் ளோன் எனத் தன் பெயரை மாயாமல் கிறுத்தி ' என நச்சிளுர்க்கினியர் பாயிர வுரைக்கண் உரைத்தார். அவர் இவ்வாசிரியரை ஜமதக்னியார் புதல்வர் என்றும் திரனது மாக் கினி என்னும் இயற்பெயர் உடையவரென்றும் அவ்வுரைக் கட்கூறுதலால் ' தொல்காப்பியன் எனத் தன் பெயர்தோற்றி' என்பதற்குத்தான் தோற்றிய குலப்பெயரே தனக்குப்பெயராக உலகத்து மாயாமல் கிறுத்தினன் என்று கருதினராவர். காப் பியக்குடி என்பது வட நூலுள் காவ்ய குலமெனப் பேர் பெறுவதாகும். ஒருவன் பிறந்து சிறத்தலாம் அவன் குலம் விளங்குமென் பது கல்லறிவாளர்க்கு உடன்பாடாம். இவற்ருல் தொல்காப் பியன் என்பது இவர் குடிபற்றி வழங்கிய பெயரென்றும், திரண தாமாக்கினி என்பது இவர் இயற்பெயர் என்றும் நச்சினர்க் கினியர் கொண்டனர் என்று தெளியலாகும். அந்தணர் அரு மறை முதலாக வடமொழியிலுள்ள தொன்னூல்கள் பலவற்றி அனும் காவியகுலம்' என்பதோர் பழையகுடிப்பெயர் வழங்கப்படுகின்றமை அம்மொழிவல்லார் நன்கறிப. காவியர் கவியின் வழியினரென்ப இருக்குவேதம், 151, 11: 83, 5 ; 121. 18: V1, 30, 11: கவி சுக்கிரனுக்கு ஒரு பெயர். இவர் பிருகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/266&oldid=731431" இலிருந்து மீள்விக்கப்பட்டது