பக்கம்:Tamil varalaru.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 த மி ழ் வ ர ல ம இனி, இழுமென் மொழியான் விழுமியது துவலினும் பரந்த மொழியர் னடிகிமிர்ந் தொழுகினுக் தோலென மொழிப தொன் மொழிப் புலவர் ' (செய்யுளி. 238) என்பதளு ற் பழைய கதையை இனிய சொற்களாலாகிய செய்யு எளில் ஒரு தொடர் கிகிலப்படச் செய்த பெரு நூல்கள் இவர்க்கு முன்னமே இத்தமிழில் உண்டென்று உணரப்படுவது. இப்பழங் கதையே உரை நடை கலந்த செய்யுள்களால் ஒரு தொடர்கிலே யாகச் செய்யப்படின் தொன்மை என்ற பெயரால் இவர்க்கு முன்னே இக்காட்டில் வழங்கினரென்று உணரலாம். உரையுஞ் செய்யுளுங் கலந்த நூலைச் சம்பு என்பர் வடநூ லார். இஃது அதுபோல்வதாகும். இவற்ருல் தமிழில் நெடுங்காலத்திற்கு முன்னே பல பழங்கதைகள் இருந்தனவென்றும், அக்கதை களைத் தனியே செய்யுளினும், உரையுஞ் செய்யுளுமாகிய வகை யினும் வைத்து நூல் செய்தல் வழக்காம் என்பதும் துணியலாம். பிற்காலத்து உண்டாகிய பெருந்தேவனர் பாரதமும், தகடுர் யாத்திரையும் இத்தொன்மை யிலக்கணப்படி செய்யப்பட்ட தென்பர். தோல் என்பது வடநால் வால்மீகி ராமாயணம் போன்ற ஒரு தமிழ்ச் சரிதச் செய்யுள் நூலேயாம். தொன்மை தோல் இவை இரண்டும் உயிரீற்றவாயே வருமென்பர். இனி, அறம் பொருள் இன்பங்களே ஒரு சேரவும், தனித் தனியாகவும் வைத்து அவற்றை அடி பல்காத செய்யுட்களில் (வெண்பாவும் வெண்பாவினமும்) பாடிய அம்மை நூல்கள் பல இவர்க்கு முன்னே உண்டென்பது, வனப்பிய ருனே வகுக்குங் காலச் சின் மென் மொழியாற் ருய பனுவலோ டம்மை தானே யடிகிமிர் பின்றே ' (செய்யுளி. 235) என வருதலானறியலாம். திருவள்ளுவர் செய்த முப்பால் முத லாக வருங்கீழ்க்கணக்குப் பதினெட்டும் இவ்விலக்கணத்தான் அமைந்தனவாம். இனி, " விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே (செய்யுளி. 239)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/320&oldid=731492" இலிருந்து மீள்விக்கப்பட்டது