பக்கம்:Tamil varalaru.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலத்து வேந்தர் 327 எனக் கூறியதஞல் இவர் காலத்துப் பாண்டியன் கிலந்தரு திரு விற் பாண்டியன் என்பது அறியக்கிடப்பது. இப்பாண்டியன் அவையத்து இவர் தம்தாலே அரங்கேற்றிய போது, போங்தை வேம்பே யாரென வரூஉ மாபெருங் தானேயர் மலேந்த பூவும் ' (தொல். புறத். 5) எனக் கூறிச் சேரர் மாலையை முற்படவைத்துப் பா ண் டி ய ர் மாலையை அதன் பின்வைத்து அதன் பின்னர்ச் சோழர் மாலேயை வைத்துக் காட்டுதலான், இவர் காலத்துச் சேரர் தமிழ்வேர்தர் மூவருள்ளே தல சிறந்தாரென உய்த்துணரப்படுவது. தமிழ் அவையோரும் அவையுடைய திருவிற் பாண்டியனும் உடன்பட்டு இங்ங்னங்கூறிய நாலைக் கேட்டதனால் இவ்வுண்மையறியப்படும். இவர் பின்னர்ப் போந்த தமிழ் கல்லாசிரியர் பலரும் இவ்வைப்பு முறையையே உடன்பட்டுக் கூறிக்காட்டுதல் சங்க நால்களிற் காணலாம். சிறுபாளுற்றுப் படையிற். ' குடபுலங் காவலர் மருமான் குட்டுவன் . . . . . . வஞ்சியும் ' (சிறுபாண். 47-50) எனவும், 8 தென் லங் காவலர் மருமான் ..........மதுரையும் 1 + (டிெ. 63-66) எனவும், குணபுலங் காவலர் மருமான் . . . . . . . . .உறந்தையும் ” (டிெ. 79-83) என வும், இம் முறையே வைத்தல் காண்க. புறப்பாட்டுத்தொகுத்தா ரும் சேரன்பாட்டு, பாண்டியன்பாட்டு, சோழன்பாட்டு, என்னும் முறையில் முன்னர் வைத்துத் தொகுத்தது காணலாம். சங்கத் துக்குப்பின்னர்ப் புறப்பொருள் வெண்பாமா லே செய்த சேரர்மர பினராகிய ஐயனுரிதகுரும், இத் தொல்காப்பியர்ை வைக்க முறையையே கொண்டு, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/335&oldid=731508" இலிருந்து மீள்விக்கப்பட்டது