பக்கம்:Tamil varalaru.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 த மி ழ் வ ர லா று கூறும் பாண்டியர் கபாடபுரத்துக் கடலிலெடுத்துள்ள முத்தே யாமென்பது தெள்ளிது. பாண்டியர் தென்கடலில் முத்தெடுக்கப் பட்டு அக்கடற் கரையை அடுத்துள்ள கபாடபுரத்தே விலை கொள்ளப்படுமாதலாம் பாண்டிய கவாடகம் எனப்பெயர் பெற்றதென்று தெரியலாம். 'தன் கடற்பிறந்த முத்திரைம்' எனப்பாண்டியனே அகப்பாட்டி ற் கூறுதலானிம்முத்துப் பாண் டியர் முத்தேயாதல் தெள்ளிது. இம்முத்துக் கபாடமுள்ள காலத்து முத்தாயினல்லது அவ்வூரில்லையாயழிந்த காலத்துக் கவாடமென வழங்கப் பெறுதல் அத்துணேப் பொருத்தமுடைத் தாகாது. கபாடமழிந்த பின்னர் வட மதுரையிற் கோயில் கொண்ட பாண்டியர் தம்முத்திற்குக் கவாடகம் என்ற பெயரே பிட்டு வழங்கினர் என்பதும் இயையாது. கொள்வாரும் மதுரை பிற்கொண்டு அழிந்த கவாடப் பெயரையிட்டனர் என்பதும் பொருந்தாமை காண்க. கவாடமழிந்த பின்னருள்ள தமிழ்! பெரும் புலவர் பலரும் பாண்டியர் கொற்கைத் துறையே முத் துடையதாகக் கூறுதல் காண்க. இதனே, 'பாண்டியன், புகழ்மலி சிறப்பிற் கொற்கை முன்றுறை அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து' (அகம். 201) எனவும, "இவர் திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம் கவர்கடைப் புரவி கால்வடுத் தபுக்கும் கற்றேர் வழுதி கொற்கை முன்றுறை" (அகம். 130) எனவும், 'மறப்போர்ப் பாண்டிய ர றத்திற் காக்குங் --- கொற்கையம் பெருந்துறை முத்தின்' (அகம். 27) எனவும் வருவன கொண்டு நன்குணர்க. கபாடபுரம் அழிந்த பின்னர்ப் பாண்டியர் கொற்கை முத்துடைய ராய காலத்து வட மதுரையைத் தமக்குத் தலைமையூராகக் கோயில்கொண்டிருந்த னர் என்பது, "பன்மீன் கொள்பவர் முகந்த விப்பி, நாரரி கறவீன் மகிழ்கொடைக் கூட்டும் பேரிசைக் கொற்கைப் பொருங்ண் வென்வேற் கரும்பகட் டியான நெடுந்தேர்ச் செழியன் மலைபுரை நெடுநகர்க் கூட்ல்" o (அகம். 296)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/46&oldid=731555" இலிருந்து மீள்விக்கப்பட்டது