பக்கம்:Tamil varalaru.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தமிழ் வ ர ல ம 'மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வெளவல்லின் மெவிவின்றி மேற்சென்று மேவார்கா டிடம்படப் புலியொடு வின்னிக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியின்ை வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்' என வருதலால், தன் ட்ைடின் ஒரு பகுதியைக் கடல் கொண்டபின் பாண்டியன், சேரநாட்டிலுஞ் சோளுட்டிலுஞ் சில பகுதிகளே வ வி யி ன ல் வணக்கிக் கொண் டான் என்று கூறுதல் காணலாம். இதனேயே, 'பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன்.' (சிலப். 11, காடுகாண்.) எனச் சிலப்பதிகாரத்துங் காணலாம். இதற்கு அடியார்க்கு நல்லார், -- "அங்கனமாகிய நிலக்குறைக்குச் சோழநாட்டெல்லேயிலே "முத்துார்க் கூற்றமும், சோமானுட்டுக் குண்டுர்க் கூற்றமும் என்னுமிவற்றை யிழந்த காட்டிற்காக ஆண்ட தென்னவன்.' என வுரைத்தார். கலித்தொகைக்கண், புலியொடு வின்னிக் கி...... கெண்டை வலியின்ை வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்,' என்று கூறியதல்லாமல் சோளுட்டிலும், சேரநாட்டிலும் ஏதோ சில பகுதிகளே ப் புலியும், வில்லும் நீக்கித் தன் கயற்கொடி பொறித்து வலியால் வணக்கிக்கொண்டான் என்று கூறிய தல்லது இன்ன இன்ன பகுதிகளைக் கொண்டான் என்று கூறிற் றில்லே அடியார்க்கு கல்லார் சேரநாட்டிற் குண்டுர்க் கூற்றத் தையும், சோனுட்டில் முத்தார்க் கூற்றத்தையும் கடல்கோளில் இமுக்த காட்டிற்காகக் கொண்டு ஆண்டான்' என்று கூறினர். இதற்குக் கூறிய மேற்கோள் சங்க நூல்களில் எம்மனேர்க்கு அகப்பட்டிலது. புறநானுாற்றில் (34) 북 முத்துாற்றுக் கூற்றமும் ' என்றிருத்தல் பொருந்தும். புறம் 24 பார்க்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/50&oldid=731560" இலிருந்து மீள்விக்கப்பட்டது