பக்கம்:Tamil varalaru.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச ங் க பம் இனி இவர் இயலுடன் இ ைசயை யு ம் நாடகத்தையுஞ் சேர்த்து வளர்த் த வாறு கூறப்புக்கு முதற்கண் அங்கனம் வளர்த்த ஒரு பெருங்கலைக் கழகம் உண்டு என்பதுபற்றி ஆராயப் படும். இக்காலத்துச் சரித்திர வாராய்ச்சியாளர்க்கும், பாண்டியர் தமிழ்ப் பெரும் புலவர்களேத் தொகுத்து ஒரு பெரிய கல்விச் சங்கம் கிறுவியது உண்டோவென்று ஐயம் நிகழ்ந்து உரைத்த வற்றையும் காண்கின்ருேம். இதுபற்றி நூல்கள் கூறுவன வற்றை எடுத்துக்காட்டி விளக்குவது இங்கு வேண்டுவதேயா கும். தேவாரத்துத் திருநாவுக்கரசு நாயனர் பாடிய திருப்புத் து.ார்ப் பதிகத்து, 'கன்பாட்டுப் புலவய்ைச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினேன் காண்' எனப் பாடுதலால் இப்போதைக்கு 1300 ஆண்டுகளுக்கு முன் னம் இருந்தவராக நன்கு தெளியப்பட்ட அங்காயனர் காலத்தே சங்கம் இருந்தது கேட்கப்பட்டுக் கூறப்பட்டுள்ளதென்று தெரிய லாம். இதனைச் 'சங்கத் தமிழ்' (திருப். 30) என்று இவரோ டொத்த காலத்தவரென்று தெளியப்பட்ட பெரியாழ்வார் திரு மகளாகிய கோதையார் கூறியதிலும் சங்க முகத்தமிழ்' (பெரிய திருமொழி-8, 4, 10.) எனத் திருமங்கையாழ்வார் கூறியதிலுங் காணலாம். இதற்குப் பின் சுந்தர மூர்த்திகள் 'பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன்” எனத் திருத்தொண்டத்தொகை யிற் கூறினர். மாணிக்கவாசகராகிய வாதவூரடிகளும் தாம் பாடிய திருக்கோவையாரில், (20) உறைவா னுயர்மதிற் கூடலி னய்ந்தவொண் இந்தமிழின் துறைவாய் நுழைந்தனே யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ' என்பதல்ை கூடலில் இயற்றமிழ் ஆய்ந்ததும் இசைத்தமிழ் ஆய்ந்ததும் கூறுதல் காணலாம். * , .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/53&oldid=731563" இலிருந்து மீள்விக்கப்பட்டது