பக்கம்:Tamil varalaru.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கந்தருவ வழக்கினர் என்ப 35/ இனி அசுரரெல்லாம் வானவர் வகையில் ஒருதிறத்தாறென் பது அவ்வடநா லார்க்கு ஒத்த கொள்கையாகும். அமரரைப் பதினெண்கணமாக வகுத்துரைப்பர். இதனே, 'அப்பிறை, பதினெண்கணனும் ஏத்தவும் படுமே” என்னும் புறப்பாட்டுக் கடவுள் வாழ்த்து அடியானும், அதற்குப் பழையவுரைகாரர் கூறியவுரையானும் உ ண ர லா ம். இப்பதி னெண் வகையினருள்ளே தேவர்க்குப் பகைமைபூண்ட அசுரர் எனத் தம்மைக் கூறிக்கொள்வதில் தமிழருக்குக் கிடைக்கும் பேறு இஃதென்று தெரிகிலேன். தேவர்க்குச் சார்பாகிய கொள் கைய்ே இவர் உடையரென்றும் அவுணர்க்கு இத்தமிழர் பகை வரே யாவரென்றும் மேலேகாட்டியவற்ருல் நன்கு தெளிவா கும். இப்பதினெண் கணங்களேத் தேவரும், அசுரரும், முனிவரும், கின்னரரும், கிம்புருடரும், கருடரும், இயக்கரும், இராக்கதரும், கந்தருவரும், சித்தரும், சாரணரும், வித்தியாதரரும், காகரும், பூதமும், வேதாளமும், தாராகணமும், ஆகாசவாசிகளும், போக பூமியோரும் எனப்பகுப்பர். இவரெல்லாம் மக்கள் வகையின ரென்றும், பல பல பகுப்பாகச் சிறப்பித்துப் பெயர் வழங்கப் பெற்றன. ரென்றுங் கருதுவாருண்டு. இவர்களே ப்பற்றிய சரிதங் கள் நால்களில் ஆங்காங்குக் கேட்கப்ப்டுமாற்ருல் இவ்வுண்மை வலியுறும். இவருள் தமிழர் யாவர் சார்பினராவர் என்பதே ஈண்டு ஆராயப்புகுவதாகும். இப்பதினெண் கணங்களுள், கந்தருவர் கொள்கையைத் தமிழர் உடன்பட்டு மிகப்பழைய நூல்கள் வழங்கலால், இவரை அக்கந்தருவர் சார்பினரென்று கூறுதல் பொருத்த முட்ைத்தாகும். o இனிக் கந்தருவர் என்னுஞ் சொற்கு மணத்தை அடைந்தவ ரென்று வடநாலார் பொருள் கூறுவர், இம்மணமென்னுஞ் " ஒ பூமியே கின்பாலெழுந்ததும் கந்தருவரும் அப்ஸ் ரஸ் ஸ்-களும் பங்கிட்டுக் கொண்டதுமான நறுமணத்தால் என்னே மணமுறச்செய் o Translation from the Hyram s of the Atharva Veda Edited by Max muller (X. 25). o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/78&oldid=731590" இலிருந்து மீள்விக்கப்பட்டது