பக்கம்:Tamil varalaru.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கந்தருவ வழக்கினர் என்பது 73 என்றமையாற் காடுறை உலகிற்கு முல்லைப்பூச் சிறந்ததாக லாலும், கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தே னிழைக்கு நாடனெடு கட்பே ' (குறுக். 3) என்றவழி மைவரை உலகிற்குக் குறிஞ்சிப்பூச் சிறந்ததாக லாலும், ' வராஅ லருந்திய சிறுசிரன் மருதின் ருழ்சினே யுறங்குக் தண்டுறை யூரன் ' (அகம். 386) என் வழித் தீம்புனல் உலகிற்கு மருதம் சிறந்ததாக லானும் பாசடை நிவந்த கனேக்கா னெய்தல் இனமீ ரிைருங்கழி யோத மல்குதொறுங் கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும் ' (குறும். 9) என்றுவழிப் பெருமணல் உலகிற்கு நெய்தல் சிறந்ததாக லானும், இங்கிலங்களே இவ்வாறு குறியிட்டார் என்று கொள் ளப்படுமென்க. m இவ்வாறு மாயோன் மேய ' என்னுஞ் சூத்திர உரையில் உரையாசிரியர் இளம்பூரணர் கூறியவாற்ருனறியல்ாம். இவ் வாறே போரிலும் தமிழர் நறுமலரையேனும் நறுந்தழையை யேனுஞ் குடி மகிழ்தல், புறத்தினேயிலும், கிரைகவர்தல் முதலாகப் பல பகுதிக்கும், வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, 'கொச்சி, உழிஞை, தும்பை, வாகை என் வரும் பெயர்களான் அறியலாகும். தமிழ் மூவேந்தருக்கும், போங்தை வேம்பே ஆர் (தொல். புறத். 5) என அடையாளத்தார் கூறுமாற்ருனும் இஃது அறியலாகும். வான்மீகி பகவான் தென்னட்டவர் போரிற் பூச்சூடுதலே எடுத் துக்காட்டினர். * இவர் கலியாணத்தில் மாலையிடுதலேயே தலைமையாகக் கருதுவர், அன்புடையாரை உச்சிமோந்து தழுவு வதும் மாலையிடுதலும் இவர்க்கு இயல்பு. -- மாலை யேந்திய பெண்டிரு மக்களும் ' (தொல். கற்பியல். 5.) என்ப.

  • ராவ்ஸாகிப் பண்டிதர் மு. இராகவையங்கார் பொருளதி சார ஆராய்ச்சி (வான். இராமா. அயோத். சருக். 93)

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/81&oldid=731594" இலிருந்து மீள்விக்கப்பட்டது