பக்கம்:Tamil varalaru.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கந்தருவ வழக்கினர் என்பது 79 நிறுத்தக் கற்பாறை இறுகி அவன் பிணிப்புண்டானகப் பின் அகத்தியரை இரந்து மீண்டும் கல்லுருகப் பாடப்பெற்று உருகிய நிலையிலே புறம்போந்து வணங்கிப் போயினன் என்பர். அகத்தியர் தென் டுை புக்குத் தமிழில் இயலும் இசையும் நாடகமுமாகப் பிரிக்கக்கூடிய தமிழ் ஒரு தொகுதியாக வழங்கப் படுதலைக் கண்டு, அதைத் தம் பேரறிவால் ஆராய்ந்து, பகுத் தெடுத்துத் தனித்தனி இலக்கணஞ் செய்தனரென்று, கினைக்கத் தகும். ஒரு நாடு இயலினும், இசையினும், காடகத்தினும் சிறந்துகொண்ட இலக்கியப் பகுதிகளே உடையது கண்டு இவை அமைந்திருக்கும் முறைமைக்கு இலக்கணம் அமைத்தார் என்ப த ல்லது, இயல் இசை நாடகங்களில் இலக்கியங்களே யும் அவரே உண்டுபண்ணினரென்று கூறுதல் இயையாது. இக்காட்டில் எல்லாச் செய்யுளும் நன்றிசைத்தற்குரிய இசைப்பாட்டாயிருத் தலே இக்கருத்தை வலியுறுத்தும். இத் தமிழ்நாடு முழுதும் கந்தருவர்க்குரிய இசையே மலிக்க தென்பதற்கும், இவர் பாடலெல்லாம் இசையளவைக்கொண்டு யாக்கப்பட்டன என்பதற்கும் அறிகுறியாக எத்துனேயோ நாற் சான்றுகள் உள்ளன. கந்துகவரி, அம்மானேவரி, ஊசல்வரி குரவைப்பாட்டு முதலிய விளேயாடற் பாடல்களானும், பிடிக் கானம் (விணப்பாட்டு) முதலிய இரங்கற் பாடல்களானும் இத் தமிழர் இன்பத்தையும் துன்பத்தையும் இசையான் வெளி பபிடும் இயல்பின ரென்று உணர லாம். இவைய ல் லாமல், ற்றப் பாட்டும் இறவைப் பட்டும் காவடிப் பாட்டும் கப்பற் பாட்டும் படையி னெழுச்சியும் பள்ளி யெழுச்சியும் சிந்த முஞ் சக்த முக் திருத்தா லாட்டும் கல்லுளிப் பாட்டுங் கவனெறி பாட்டும் பாவைப் பாட்டும் பல கறைப் பாட்டும் மறத்தியர் பாட்டுங் குறத்தியர் பாட்டும் பள்ளுப் பாட்டும் பல கடைத் திறப்பும் வள்ளே ப் பாட்டும் பிள்ளே ப் பாட்டும் கறத்தற் காயர் திறத்துரை பாட்டும் பொருத வேந்தர் விருதுப் பாட்டும் களுலப் பாட்டும் காதற் பாட்டும்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/87&oldid=731600" இலிருந்து மீள்விக்கப்பட்டது