பக்கம்:Tamil varalaru.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 த மி ழ் வ ர லா ற என்றிவை முதலா வெத்துணேயோ பல இசைப்பாடல்கள் இக்காலத்தும் ஆங்காங்கு வழங்குதல் காணலாம். இவற்ரும் பண்டைக்காலத்து இத்தமிழ்நாட்டு இசைச்சுவை யாண்டும் மலிக்கு வழங்கியதென்று உய்த்துணரத்தகும். இங்ங்னமே அழுகையும் தொழுகையும் அசதி யாடலும், ஏத்து மிழிப்பும் இரத்தலுமெல்லாம், பாட்டாய் வர லிங் காட்டின் வழக்கே ' எனக் கண்டறியலாம். இவையன்றி உலகியலறிவுறுத்தும் அள விறந்த பழமொழிகளெல்லாம் செய்யுட்குரிய இசையைத் தழுவி மோனேயும் எதுகையும் முற்றப் பெற்றுச் சில சீர்களாகுய உரைப் பாட்டடிகளாக இக்காட்டில் கெடுங்காலமாக வழங்கு தலும் ஆராய்ந்து கொள்க. இவ்வாறு பலதொழில் மாந்தரும், இனிய ஓசையும் கன்பொருளும் கிறைந்த பாடல்களேயே தமக்கு இளேப்பாற்றும் வாயிலாகக் கொண்டு சிறந்தது இத்தென்கு டென்று கன்குணரலாம். நாடாண்ட அரசரும் இசையையே மிகுத்துப் பாராட்டி வளர்த்தனர் என்பது தமிழ் நூல்களிற் கேட்கப்படுவதொன்று. பாண்டியருள் சார குமாரன் என்பவ இக்கு இசையறிவுறுத்தற்குச் சிகண்டி என்னும் அருந்தவ முனிவர் செய்தது இசை நுணுக்கம் என்னும் நூலென்பர் இதனே, தேவ விருடியாகிய குறுமுனிபாற் கேட்ட மாளுக்கர் பன்னிருவருட் சிகண்டி என்னும் அருந்தவமுனி இடைச்சங்கத்து அகாகுலனென்னுக் தெய்வப் பாண்டியன் தேரொடு விசும்பு செல்வோன், திலோத்தமை என்னுந் தெய்வமகளைக்கண்டு தேர்ற் கூடினவிடத்துச் சனித்தானத் தேவரும் முனிவரும் சரியாகிற்கத் தோன்றினமையிற் ச ரகுமாரன் என, அப்பெயர் பெற்ற குமாரன் இசையறி தற்குச் செய்த இசை நுணுக்கமும்' எனவும், பாண்டியன் மதிவாணனர் செய்த முதனூல்களி அள்ள வசைக் கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க் கூத்தியன்ற ' மதிவாணர் காடகத் தமிழ் நால் ' என வும் அடியார்க்கு கல்லார் சிலப்பதிகாரத்தில் உரைச் சிறப்புப் பாயிரத்துக் கூறுவதால் அறிக. பாண்டியர் இசை வளர்த்தது கூடலின் ஆய்ந்த ஏழிசைக் குழல் ' எனத் திருச்சிற்றம்பலக் கோவை யாரின் வருதலானும் அறியலாம். முத்தமிழின் இசைத் தமி ழென ஒன்றைத் தனியே பாண்டியர் வளர்த்தனரென்பதும் சண்டைக்கேற்ப நோக்கிக்கொள்க. மூவேந்தரும், இசைப்பாணர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/88&oldid=731601" இலிருந்து மீள்விக்கப்பட்டது